கேள்வி
டாக்டர் ! எனக்கு ஒரு வயதிலே ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது மீண்டும் நான் கருத்தரிக்கலாமா?
பதில்
ஒரு குழந்தை பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கு இடையில் இரண்டுவருட கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
இருந்தாலும் இது கட்டாயமானதல்ல. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடம் வரை காத்திருக்காமல் விரைவாக அடுத்த ( ஒரு வருடமளவில்) குழந்தையைப் பெற்றெடுப்பது நல்லது.
இவ்வாறு குறைந்த கால இடைவெளியில் குழந்தை பெற நினைப்பவர்கள் நன்கு போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.
கேள்வி கேட்ட சகோதரி இது நீங்கள் உங்கள் வயது பொருளாதார வசதி என்பவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டிய விடயம்.
ஆனாலும் உங்க்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட படியால் விரும்பினால் நீங்கள் தாராளமாக கருத்தரிக்கலாம் என்பதே என் பதில். .
0 comments:
Post a Comment