Wednesday, November 24, 2010

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயல்பாக ஏற்படுகின்ற மாற்றங்களான பூப்படைதில்,கர்ப்பம் , மாதவிடாய் நிறுத்தம் போன்றவை சம்பந்தமாக நிறையப் பேருக்கு நிறையச் சந்தேகங்கள் இருக்கலாம்.அவை சம்பந்தமான நிறைய மருத்துவப்பிரச்சினைகளையும் பெண்களுக்கு ஏற்படலாம்.ஆகவே இந்த நிலைமைகள் சம்பந்தமான அடிப்படை விடயங்களை ஒவ்வொரு பெண்களும் அறிந்திருப்பது அவசியமாகும்.

அந்த அறிவை வழங்கும் முகமாக பெண்கள் பக்கம் என்ற தலைப்பிலே பூப்படைவதிலிருந்து இறப்பதுவரை ஒரு பெண்ணில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எழுதலாம் என்று நினைக்கிறேன்.இந்த இடுகைகளில் உங்களின் பங்களிப்பும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் எழுதும் விடயங்கள் சம்பந்தமாக உங்கள் மனதில் ஏற்படும் மேலதிக பிரச்சனைகளை/சந்தேகங்களைத் தந்துதவினால் அவற்றிக்கு விளக்கமளிப்பதன் மூலம் இந்த முயற்ச்சியை என்னால் இன்னும் சீர்படுத்தமுடியும்

இன்று பூப்படைவது சம்பந்தமான விடயங்களோடு  இடுகையை ஆரம்பிக்கின்றேன்.....


பூப்படைதல் 

வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையாஎன்பதைதீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம்.ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13வயதில்தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்லமுதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல்முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறதுஇது பூபடைதலின் ஒரு அங்கமேஇந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல 11-12 வயதளவில் தான்ஆரம்பிக்கிறது.ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயேதொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகுதான்பாருங்கள் வயதில் நிகழவேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில்.

இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும்
இல்லை.

ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்லஇதுபெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்டகால தொடர் நிகழ்வாகும்.

பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?

பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர்பருவத்திற்குச் செல்கிறாள்அப்போது அவள் உடல் மற்றும் உளம்என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சியோடு.இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில்ஆரம்பிக்கும்அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சிசடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும்அதைப்போல உடற்பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும்குறிப்பாகஇடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவது போன்றமயிர் வளர்ச்சி ஏற்படும்குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல் , மற்றும்அக்குள் பகுதிகளிலேஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததாகமெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வானமுதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங்களின்பின்பே நிகழும்இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்றுகொண்டாடுகிறோம்.

மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லைநான்மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல்நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் .இது ஒழுங்க்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம்இது பற்றி பூரணஅறிவு அந்தப் பிள்ளைக்கு தெளிவு படுத்தப் படவேண்டிய ஒன்றுஇதுபெற்றோரின் கடமையாகும்.இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றிசிந்திக்கத்தொடங்கும்சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும்ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல்மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

அடுத்த பதிவில் பூப்படைதல் சம்பந்தமான மருத்துவப் பிரச்சினைகள் ...

தொடரும் ...

.....

6 comments:

நிகழ்காலத்தில்... said...

இயல்பான நடைக்கும், எடுத்துக்கொண்ட தலைப்பும் மிகவும் பொருத்தம்..

தொடருங்கள்

Unknown said...

எல்லம் சரி டாக்டர்..
ஆனா ஆண்களுக்கும் பல உடல் மன பிரச்சனைக்ள் இருக்கதானே செய்கின்றது.

வார, மாத பத்திரிக்கைகள் உட்பட எல்லம் பெண்கள் பூப்படைவதைபற்றி
விளக்குவது போல் ஆண்களின் எந்த மருத்துவ தேவை பற்றியும் எழுதுவதில்லையே, நீங்க்ளாவது அதை செய்ய கூடாத ?

துமிழ் said...

நிகழ்காலத்தில்... said...
இயல்பான நடைக்கும், எடுத்துக்கொண்ட தலைப்பும் மிகவும் பொருத்தம்..

தொடருங்கள்//

thanks

துமிழ் said...

Vinoth said...
எல்லம் சரி டாக்டர்..
ஆனா ஆண்களுக்கும் பல உடல் மன பிரச்சனைக்ள் இருக்கதானே செய்கின்றது.

வார, மாத பத்திரிக்கைகள் உட்பட எல்லம் பெண்கள் பூப்படைவதைபற்றி
விளக்குவது போல் ஆண்களின் எந்த மருத்துவ தேவை பற்றியும் எழுதுவதில்லையே, நீங்க்ளாவது அதை செய்ய கூடாத ?

November 25, 2010 //



செய்வோம்...கருத்துக்கு நன்றி

sakthi said...

அருமையான பதிவுங்க மருத்துவரே !!!

sakthi said...

நான் எழுதும் விடயங்கள் சம்பந்தமாக உங்கள் மனதில் ஏற்படும் மேலதிக பிரச்சனைகளை/சந்தேகங்களைத் தந்துதவினால் அவற்றிக்கு விளக்கமளிப்பதன் மூலம் இந்த முயற்ச்சியை என்னால் இன்னும் சீர்படுத்தமுடியும்


கண்டிப்பாக டாக்டர்