உலகிலேயே அதிகளவான கர்ப்பிணிகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்
நோய் கர்ப்பகால உயர் குருதியமுக்கமாகும்(பிரஷர்).இது pregnancy induced hypertension எனப்படும் .
கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர் நோய் இல்லாத ஒரு பெண்ணிலே கர்ப்பம்
தரித்தபின் பிரஷர் நோய் ஏற்படுவதாகும்.
இது பல பாரதூரமான விளைவுகளை தாய்க்கும் ,குழந்தைக்கும் ஏற்படுத்தலாம்.
பொதுவாக இந்த நோய் கர்ப்பம் தரித்து 20 வாரங்களுக்குப் பிறகே ஏற்படும்.
இது தீவிரத்தன்மையைப் பொறுத்து பல கட்டங்களாகப் பிரிக்கப்படும்.
1.பிரஷர் மட்டும் கூடிய நிலை
2.அதிகரித்த பிரஷரோடு சிறுநீரிலே அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறும் நிலை
( வெளியேறும் புரதத்தின் அளவைப் பொறுத்து இந்த நிலை இன்னும் பிரிக்கப்படும்)
3.மேற்சொன்ன இரண்டோடும் வலிப்பு ஏற்படும் நிலை (eclampsia)
இறுதி நிலையானது மிகவும் பயங்கரமானது.சிறிது நேரத்திலேயே தாயையும் பிள்ளையையும் கொன்று விடக்கூடியது.
பிரஷர் மட்டும் கூடியுள்ள ஆரம்ப நிலையிலே மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.
ஆனாலும் பிரஷரை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தமுடியாமல் போகும் நிலையில் அல்லது புரத வெளியேற்றம் அதிகரிக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு குழந்தையைப் பிறக்கச்செய்வதுதான்
வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக குழந்தையை பிறக்கச் வேண்டும்.
சில வேளைகளில் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தாயைக் காப்பாற்றும் பொருட்டு 7 மாதமளவிலேயே(சிலவேளை அதற்கு முன்னும் ) குழந்தையை பிறக்கச் செய்ய வேண்டி வரலாம்.அந்த நிலையில் குழந்தையை விட தாயின் உயிரே கவனத்தில் கொள்ளப்படும்.
குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் பிரஷர் தானாக சரியாகிவிடும்.
ஆகவே பெண்களே!
1.நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது உங்கள் பிரஷரை சோதித்துக்கொள்ள வேண்டும்.
2.உங்களுக்கு பிரஷர் நோய் ஏற்பட்டால் எந்த நிமிடமும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
3.பிரஷர் நோய் ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமாக வைத்தியரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
4.சில வேலை நீண்ட நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருக்கவும் வேண்டிவரலாம்.
5.சிலவேளைகளில் உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு குழந்தையை தியாக செய்யவேண்டியும் வரலாம்
கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரஷர் நோய்க்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்படும் தேவை இல்லை
மேலே சொன்ன பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரஷர் நோயிலே ஏற்படும். மாறாக பிரஷர் நோய் ஏற்கனவே உள்ள ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படாது.
இது பற்றிய மேலதிக சந்தேகங்களை முன் வையுங்கள்.
1 comment:
தயவு செய்து கர்பிணி களை கொல்லும் ...என மாற்றிவிடவும். தகவல் பயன் உள்ளது .நன்றி
Post a Comment