சில பெண் குழந்தைகளுக்கு பிறந்து சில நாட்களுக்கு பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கலாம். இது கருப்பையில் இருக்கும் போது அம்மாவில் இருந்து குழந்தைக்குச் சென்ற சில ஹார்மோன்களினால் ஏற்படுவது.
அதாவது அம்மாவின் ரத்தத்தில் இருக்கும் ஹார்மோன்கள் பிள்ளையின் ரத்தத்தில் கலந்து மாதவிடாயை ஒத்த மாற்றத்தை அந்தக் குழந்தையில் ஏற்படுத்தும் இதனால் குழந்தை பிறந்து சில நாட்களுக்கு சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கும். இது சாதாரணமான ஒரு நிகழ்வாகும். இதற்காக எந்தப் பெற்றோரும் அச்சப்படத் தேவை இல்லை.
எல்லாக் குழந்தைகளுக்கும் இது ஏற்படாது.
5 comments:
new info
அட இப்படி கூட நடக்குமா???
நல்ல பகிர்வு மருத்துவரே
இப்படியும் நடக்கிறது//
நன்றி சகோதரி
Post a Comment