கேள்வி
உங்கள் சேவை புனிதமானது, இந்த சேவை மேலும் தொடர பலர் பயன் பெருவார்கள். எனக்கு வயது 23 ஆகிறது, எனது உயரம் 5.2″. உயரம் குறைவாக இருப்பதால், என் திறமைக்கேற்ற பயன் கிடைப்பதில்லை. என் உயரத்தைக் கூட்ட என்ன வழி, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி
பதில்
15 வயதலவிலேயே உங்கள் வளர்ச்சிப் படிநிலைகள் முடிவடைந்துவிடும்.அதாவது ஒருவர் பூப்படைந்து சில சில வருடத்துக்குள் அவரின் வளர்ச்சி முற்றுப் பெற்று விடும்.
அதற்கப்பால் உங்கள் உயரத்தை எந்த வழியிலும் கூட்ட முடியாது.உயரம் குறைவானதாக இருப்பதால் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்காது என்பது உங்கள் அடிமனத்தின் எண்ணமே அதுவே உண்மை இல்லை. ஆகவே உங்கள் வேலையை சரியாகச் செய்தால் உரிய பலன் கட்டாயம் கிடைக்கும்.
தேவை இல்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே. குறிப்பாக உங்களை வளரச் செய்யும் மருந்து என்று தரப்படும் எதையும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்
3 comments:
எனது அறிவுக்கு எட்டியவரை பெண்கள் 15 வயது வரைக்கும் ஆண்கள் 16, 17 வயது வரைக்கும் வளர்வார்கள் என நினைக்கிறேன். தவறு இருந்தால் திருத்தவும். மேலும் எல்லாவற்றிலும் இது இது தான் வரையறை என கூற முடியாது. ஆண்கள் 17 தாண்டி வளர்ச்சி பெற்றவர்களை கேள்வி பட்டிருக்கிறேன்.
21 வயது வரை உடல் வளர்ச்சியும்,காது மட்டும் சாகும் வரை கண்ணுக்கு தெரியாத அளவில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று அமரர் சுஜாதா "கற்றதும் பெற்றதும்" ல் எழுதியிருக்கிறார்.
பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.
அது பற்றி மேலதிக விபரங்களை இன்னும் விளக்கமாக விரைவில் பதிவிட்டு
உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
Post a Comment