நான் எழு மாதக் கர்ப்பிணி.எனக்கு நேற்று மார்பிலிருந்து மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியது.இன்றும் என் உள்ளாடை நனைந்திருந்தது.
நான் வெளிநாட்டில் கணவருடன் தனியாக இருப்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.நல்லவேளையாக இன்று உங்கள்
தளத்தை பார்க்க பின் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?இது ஏதாவது நோயின் அறிகுறியா?
(தமிழாக்கம்)
பதில்
நல்லது சகோதரி. நீங்கள் நேரு மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியதாக சொன்னிர்கள்.இது அனேகமாக கடுப்புப் பால் எனப்படும் colostrum என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து இன்று வெளியேறுவது சாதாரண பாலாக இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.எதற்கும் நீங்கள் உங்கள் மார்புகளை அழுத்தி வெளியேறுவது பால்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெளியேறுவது பால்தான் என்றால் அச்சப்படத் தேவை இல்லை.குழந்தை பிறக்கும் முன்பே பால் வெளியேறுவது சாதாரண நிகழ்வாகும்.
வெளியேறுவது பால் இல்லாவிடில் அல்லது ரத்தம் கலந்திருப்பின் வைத்தியரை நாடுவது உகந்தது.
1 comment:
good post
Post a Comment