Saturday, November 20, 2010

40 வயதில் கருத்தரிக்கலாமா?

கேள்வி 

எனக்கு 40 வயது . கணவர் வெளிநாட்டில் வேலை செய்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.இந்த வயதில் நான் பிள்ளை பெறலாமா? விளக்கவும் .
(தமிழாக்கப்பட்டுள்ளது)


பதில்

நல்லது சகோதரி. உங்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வருமாயின் பிள்ளை பெற்றுக் கொள்வதில் எந்தத் பிரச்சினையும் இல்லை.
ஆனாலும் நவீன மருத்துவத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அது ஒரு அபாயகரமான பிரசவம்(High Risk pregnancy) என்ற ரீதியிலே பராமரிக்கப்படும்.
அதாவது அவர்களுக்கு35 வயதை விடக் குறைந்த கர்ப்பிணிகளோடு ஒப்பிடும் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள்  அதிகமாகும். அதற்காகவே அவர்களுக்கு சற்று அதிகமான கர்ப்பகால கவனிப்புத் தேவைப் படுகிறது.

35  வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பகால நீரழிவு, குருதியமுக்கம் போன்றவை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதால் நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது (அல்லது வைத்தியரின் அறிவுரைப்படி அடிக்கடி வைத்தியரை சந்திக்கவேண்டும்)

மேலும் இந்த வயதில் உங்களுக்கு இப்போதே நீரழிவு அல்லது பிரஷர் (உஅய்ர் குருதியமுக்கம்) போன்றவை ஏற்பட்டிருக்கலாம்.
கர்ப்பம் தரிக்க முன் கட்டாயமாக ஒரு வைத்தியரைச் சந்தித்து அந்த நோய்கள் இல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த வயதிலே கர்ப்பம் தரித்தால் குழந்தையிலு சில குறைபாடுகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அதிலே முக்கியமாது Down Syndrom எனப்படும் மொங்கோலியன்  பேபி எனப்படும் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஆகவே கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள் வைத்தியரின் உதவியுடன் குழந்தைக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்பதைஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதாவது வயிற்றில் இருக்கும் போதே இந்த நோய் உள்ள குழந்தைகள் அடையாளம் காணப்படலாம்.

இறுதியாக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனாலும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தவீர்ப்ப்தற்காக சரியான மருத்துவ கண்காணிப்பைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

2 comments:

மோதி said...

Valuable info, Thanks for sharing

துமிழ் said...

நன்றி மோதி