எல்லா பிரச்சினைகளும் சுய இன்பம் பற்றி நம்மிடையே நிலவும் பிழையான சில கருத்துக்களினாலேயே ஏற்படுகின்றன.
சுய இன்பம் காரணமாக ஆண்மை குறைவடைகிறது, குழந்தைப் பாக்கியம் லாமல் போகும் என்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற
சந்தேகங்களே மிகவும் அதிகமாக உள்ளன.
அதிலும் ஆண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறத் தொடங்கும் போதே இது ஒரு பிரச்சினையாக அவர்கள் மனதிலே உருவெடுக்கத் தொடங்குகின்றன.
தன் சுய இன்பப் பழக்கத்தால் தன்னால் தன் மனைவியை சந்தோஷப் படுத்துவதிலே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
நேற்று ஒரு நண்பர் கேட்டிருந்தார் , அவர் நீண்ட நாட்களாக சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் இப்போது தனக்கு விரைவிலேயே விந்து வெளியேறி விடுவதாகவும் இதனால் தன் வருங்கால மனைவியைச் சந்தோஷப் படுத்த முடியுமா என்று சந்தேகமாக இருப்பதாகவும் அதைச் சோதித்துப் பார்க்க விலைமாதர் ஒருவரிடம் செல்லப் போவதாகவும் கேட்டு இரு ந்தார்.
சுய இன்பத்தில் விந்து வெளியேற எடுக்கும் நேரமும் உறவில் ஈடுபடும் போது விந்து வெளியேறும் நேரமும் ஒன்றாக இருக்கும் என்ற பிழையான எண்ணத்திலாயே அந்த நண்பருக்கு விலை மாதரிடம் போய்ச் சோதிக்கும் அளவுக்கு மனது போயிருக்கிறது.
அவர் அப்படியே விலைமாதரிடம் சென்று முதற்தடவையாக உறவில் ஈடுபடும் போது மனப் பதட்டம் காரணமாக அவருக்கு விரைவாகவே விந்து வெளியேறி விட்டால் அதையே உண்மை என்று அவர் வாழ்க்கையே சீரழிந்து போய் விடலாம்.
ஆகவே நண்பர்களே சுய இன்பம் காரணமாக உங்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற இந்தமாதிரி பாதிப்புக்களைத் தவிர வேறு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படும் என்று இதுவரை மருத்துவரீதியாக நிரூபிக்கப் படவில்லை.
ஆதலால் சுய இன்பம் காரணமாக தன் இல்லறம் பாதிக்கப்படும் என்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி
உண்மையிலே உங்கள் இல்லறத்தை வீணாக்கி விடாதீர்கள்.
9 comments:
மற்றவர்கள் எழுதத் தயங்கும் விடயத்திற்கு என தனி பக்கம் ஆரம்பித்து சேவையாற்றும் உங்கள் பணிக்குப் பாராட்டுக்கள்.
வயது வந்தவர்கள் யதார்த்தமாக கலந்து பேசவேண்டியதை பேசாமல் மூடிமூடி வைப்பதே பல்வேறு குடும்ப, சமுதாய உறவுச் சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ..
இதை தெளிவாக தாங்கள் அலசுவது மகிழ்ச்சி..
வாழ்த்துகள்..
Dr.எம்.கே.முருகானந்தன் said...
மற்றவர்கள் எழுதத் தயங்கும் விடயத்திற்கு என தனி பக்கம் ஆரம்பித்து சேவையாற்றும் உங்கள் பணிக்குப் பாராட்டுக்கள்.
November 15, 2010 1:59 அம//
உங்கள் கருத்துக்கு நன்றி டாக்டர்
நிகழ்காலத்தில்... said...
வயது வந்தவர்கள் யதார்த்தமாக கலந்து பேசவேண்டியதை பேசாமல் மூடிமூடி வைப்பதே பல்வேறு குடும்ப, சமுதாய உறவுச் சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ..
இதை தெளிவாக தாங்கள் அலசுவது மகிழ்ச்சி..
வாழ்த்துகள்..
November 15, ௨௦௧//
நன்றி நண்பரே
THANKS FOR UR ADVICE DOCTOR
உங்கள் சேவைக்கு என்னவென்று நன்றி சொல்வதென்றே தெரியவில்லை .
இப்பொழுதுதான் ஒரு மன நிறைவோடு இருக்கிறேன்.
நன்றி ஐயா
உங்கள் சேவைக்கு என்னவென்று நன்றி சொல்வதென்றே தெரியவில்லை .
இப்பொழுதுதான் ஒரு மன நிறைவோடு இருக்கிறேன்.
நன்றி ஐயா
தொடரட்டும் உங்கள் சேவை
பயனுள்ள் பதிவுகளை தரும் உங்கள் சேவை பாராடுக்குரியது. மேலும் தொடருங்கள்.
Post a Comment