Sunday, May 30, 2010

சுய இன்பம் சில சந்தேகங்களும் பதில்களும் !

கேள்வி
ஹாய் வணக்கம், தங்களின் உபயோகரமான பதில்களுக்கு நன்றி .
நான் இதற்கு முன்பும் சுயஇன்பம் பற்றி சந்தேகம் கேட்டுள்ளேன். நான் தொடர்ந்து பத்து வருடம் சுய இன்பத்தில்  ஈடுபட்டிருந்தேன். சில நாட்களாக விறைப்பு குறைந்தது போல உணர்கிறேன். சுய இன்பத்தால் ஆண்மை போய் விடுமா? சற்று விளக்கவும். எனக்கு திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது குழப்பத்தில் உள்ளேன்.
அரவிந்தன்//

பதில் 


நல்லது நண்பரே !
நீங்கள் முன்பு சுய இன்பம் பற்றி கேட்டது போல நானும் முன்பு சுய இன்பம் பற்றி இந்த இடுகையில் எழுதி இருந்த காரணாத்தால் பதில் அளிக்காமல் இருந்தேன். இருந்தாலும் மீண்டும் நீங்கள் கேட்ட காரணத்தால் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சுய இன்பம் என்பது மனித இனத்திலே காணப்படும் ஒரு பொதுவான செயன் முறையாகும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்விலே 99 வீதமான ஆண்களும் .. 85 வீதமான பெண்களும் சுய இன்பத்திலே ஈடுபடுவதாக தெரியவந்தது.
நமது சமூகத்திலே சுய இன்பம் என்பது ஏதோ குற்றமான செயல் என்பது போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டதாலே இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வின் படி 100  ஆண்களை எடுத்துக் கொண்டால் 99 பேர் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள். சுய இன்பம் உண்மையில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமானால் அனேகமாக எல்லா ஆண்களும் ஆண்மை அற்றவர்களாகவே இருக்க வேண்டும்.

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது முற்றிலும் ஒரு மூட நம்பிக்கை.

மேலும் சுய இன்பம் பற்றி அறிந்து கொள்ள இந்த இடுகையில் போய் வாசித்துப் பாருங்கள்.
மேலும்  நீங்கள் பத்து வருடமாக சுய இன்பத்தில் ஈடு படுவதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் நீங்கள் ஆண்மைக் குறைவு ,அதாவது ஆணுறுப்பில் விறைப்புத் தன்மை அடைவதில் குறை அற்றவர் என்பதாகும் .

வெறுமனே மூட நம்பிக்கை மூலம் உங்கள் ஆண்மையைக் குறைவாக மதிப்பிடாமல் நிச்சயிக்கப்பட பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைந்து  நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.


5 comments:

ரவி said...

உங்கள் சேவை. எப்போதும் தேவை.

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் பயனுள்ள பதிவு.

பாலியல் சார்த்த கல்வி அவசியம் இன்று.

நீங்கள் இன்னும் கூட தெளிவாக ஒரு பதிவு இடலாம். ஆண் எந்த வயதில் இருந்து சுய இன்பம் அனுபவிக்க முயலலாம். எந்த முறையில் சுய இன்பம் அனுபவித்தல் உடல் தீங்கு, நரம்பு வலி ஏற்படாது (படுத்து கொண்டா, தரையில் அமர்து கொண்டா, I mean which poses is painles, not risky to the body, c-ock, f-ingers etc).

அதே போல இரு ஆண்கள் சேர்ந்து/ இரு பெண்கள் சேர்ந்து சுய இன்பம் செய்வது குறித்தும் விளக்கமாக எழுதலாம்.

துமிழ் said...

செந்தழல் ரவி said...
உங்கள் சேவை. எப்போதும் தேவை.//

நன்றி ரவி
எப்போதும் என் சேவை இருக்கும் ...

துமிழ் said...

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் பயனுள்ள பதிவு.

பாலியல் சார்த்த கல்வி அவசியம் இன்று.

நீங்கள் இன்னும் கூட தெளிவாக ஒரு பதிவு இடலாம். ஆண் எந்த வயதில் இருந்து சுய இன்பம் அனுபவிக்க முயலலாம். எந்த முறையில் சுய இன்பம் அனுபவித்தல் உடல் தீங்கு, நரம்பு வலி ஏற்படாது (படுத்து கொண்டா, தரையில் அமர்து கொண்டா, I mean which poses is painles, not risky to the body, c-ock, f-ingers etc).

அதே போல இரு ஆண்கள் சேர்ந்து/ இரு பெண்கள் சேர்ந்து சுய இன்பம் செய்வது குறித்தும் விளக்கமாக எழுதலாம்.//

நன்றி ராம்ஜி எடுத்த எடுப்பிலே எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லும் பொது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நன்கு இல்லை . கோசம் கொஞ்சமாகத்தான் சொல்கள வேண்டும். நிச்சயமாக உங்கள் கேள்விகளுக்கு இனிவரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் .

ராம்ஜி_யாஹூ said...

thanks for your reply. In my generation these info were not communicated properly , atleast U could teach my son or my brother's son on this.