Friday, July 23, 2010

மார்பகக் கட்டிகள்

கேள்வி

வணக்க ஐயா,

எனது வயது 25.எனது வலது பக்க மார்பிலே சிறிய கட்டி இருக்கிறது.இதனால் எந்த நோவும் ஏற்படுவதில்லை. நண்பிகளிடம் சொன்ன போது  இது புற்று நோயாக இருக்கலாம் என்கிறார்கள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?மிகவும் மனம் உடைந்து போய் உள்ளேன் .தயவு செய்து உடனடியாக பதில் தாருங்கள்.

இப்படிக்கு,
(பெயர் நீக்கப் பட்டுள்ளது)

பதில்

நல்லது நண்பி. உங்கள் வயது 25என்பதால் இந்த கட்டி புற்று நோயாக இருப்பதற்கான சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு.அதனால் தேவை இல்லாமல் அச்சப் படுவதைத் தவிர்க்கவும்.

இந்த வயதில் ஏற்படுகின்ற கட்டிகள் அனேகமாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத fibro adenoma எனப்படும் கொழுப்புக் படிமக் கட்டிகளே.

இருந்தாலும் இதை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரு சத்திர சிகிச்சை நிபுணரைச் சந்தித்து உரிய சோதனைகளை செய்து கொள்ளுங்கள்.


மேலும் மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் புற்று நோயாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள்...
  1. சடுதியாக அளவில் பெரிதாகும் கட்டிகள்
  2. நோவினை ஏற்படுத்தும் கட்டிகள்
  3. கட்டியைச் சுற்றி நோவுடன் செந்நிறமாக காணப்படுதல்
  4. கட்டியுடன் காயங்கள் ஏற்படுதல்
  5. மார்பில் இருந்து திரவங்கள், இரத்தம் வெளியேறுதல்
  6. அக்குள் பகுதியில் கட்டி ஏற்படுதல்

மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். ஏனென்றால் அந்த கட்டி புற்று நோயாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஆனாலும், மார்பில் கட்டி உள்ள அனைத்துப் பெண்களும் வைத்திய ஆலோசனை பெற்று அது புற்று நோயல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

No comments: