Sunday, June 13, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

கேள்வி

டாக்டர்  ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 திருமதி கணேசன் .

பதில்


நல்லது !

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...



8 comments:

ஜிஎஸ்ஆர் said...

நல்ல விளக்கமான பதிவு புதுமண தம்பதியருக்கு நிச்சியம் உதவும்


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Swengnr said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

துமிழ் said...

ஜிஎஸ்ஆர் said...

நல்ல விளக்கமான பதிவு புதுமண தம்பதியருக்கு நிச்சியம் உதவும்


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்//

thanks for ur comment

துமிழ் said...

Software Engineer said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!//

ok

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல உபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

கஹடோவிட said...

நல்ல பதிவு. கேள்வியை கேட்ட சகோதரருக்கு நன்றி ஏனெனில் இதே கேள்வியை நானும் உங்களிடம் கேட்க இருந்தேன்.
மேலும் உங்களது சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சண்முககுமார் said...

உபயோகமான பதிவு .

விச்சு said...

குழந்தைவரம் வேண்டுபவர்களுக்கு நிச்சயம் உதவும்.