Monday, June 14, 2010

கர்ப்பம் கலைக்கும் உணவுகள்....கேள்வி

டாக்டர் , நான் இப்போது கர்ப்பம் தரித்து ஒரு மாதம் ஆகிறது. எனது வீட்டிலேயே என்னை பப்பாசி, தக்காளி என்று நிறையச் சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.சாப்பாடுகளால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவுசெய்துவிளக்கவும்.

பெயர்குறிப்பிட விரும்பாத பெண்.

பதில் 

 நல்லது தோழி இதுவெல்லாம் நம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள். நன்கு கனிந்த எந்தப் பழமும் நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம்.
அதே போல் எந்த மரக்கறி வகைகளையும், இறைச்சிகளையும், மீன்  முட்டை போன்றவை கூட பயமில்லாமல் சாப்பிடலாம்.

செயற்கையான இரசாயனப் பதார்த்தம் கொண்ட சந்தையில் கிடைக்கும் உணவுகளை வேண்டுமானால் தவிர்க்கலாம்.
செயற்கையான உணவுகளில் நமக்குத் தெரியாமல் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் சிலவேலைகளை குழந்தையைப் பாதிக்கலாம்.

இயற்கையான உணவுகள எதுவேண்டுமானாலும் பயமில்லாமல் உண்ணலாம்.
மரக்கறிகளை சமைக்கும் முன் நன்றாக அலசிக் கழுவிக்கொள்ள மறக்க வேண்டாம்.

அது தவிர முழுகுதல், ஊடுதல் படி ஏறுதல் போன்றவற்றாலும் கர்ப்பம் களையும் என்பதும் வெறும் மூட நம்பிக்கையே.

Monday, June 14, 2010

மாரடைப்பு

மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பினால் ஏற்படுகின்ற நெஞ்சு வலியின் இயல்புகளை மேலே உள்ள இடுகைகளினை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள் .

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ நெஞ்சு வலி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பதட்டமடையாமல் அவரின் நெஞ்சுவலியின் இயல்புகளை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அது மாரடைப்பினால் ஏற்படும் வலியின் இயல்புகளைக் கொண்டிருந்தால் , அந்த நபருக்கு ஆறுதலாக மனத் தைரியம் கொடுப்பதோடு முடிந்தால் ஒரு அஸ்பிரின்(Aspirin)  மாத்திரையை விழுங்கக் கொடுத்து உடனடியாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அந்த நேரத்தில் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவதை பிற்போட வேண்டாம்.

வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றவுடன் வைத்தியர் அது மாரடைப்பினால் ஏற்பட்ட வலி என்று சந்தேகித்தால் உடனடியாக மாரடைப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கான சில மாத்திரைகள் மற்றும் ஒட்சிசன் என்பவற்றைக் கொடுத்த பின்பே அது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்.

மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் சில அடிப்படை பரிசோதனைகலாவன,
1..ஈ சி ஜி .(ECG)
2. எக்கோ பரிசோதனை.(Echo)
3.இரத்தத்தில் விடப்படும் சில இதயப் பதார்த்தங்களின் அளவுகள்.(Cardiac marker)

இது தவிர கொலஸ்ரோல் அளவு(Lipid profile), இரத்தத்தின் சீனியின் அளவு(bloodsugar level), இரத்தத்தில் ஹீமோ குலோபினின் அளவு(Hb) , சிறுநீரகத் தொழிற் பாட்டைக் குறிக்கும் பதார்த்தத்தின் அளவுகள்(Renal Function test) போன்றவையும்பரிசோதிக்கப்படும்.தொடரும்...Sunday, June 13, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

கேள்வி

டாக்டர்  ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 திருமதி கணேசன் .

பதில்


நல்லது !

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...

No comments: