Friday, June 11, 2010

சுயஇன்பம்,சிறுநீரகக் கல்

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு, என் பணிவான
வணக்கம்.தங்களின் பயனுள்ள பாலியல் ஆலோசனைக்கு மிக்க நன்றி! அதுபோல் என்னுடைய சில சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்..
1.அடிக்கடி சுய இன்பம் செய்வதால் சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்படுமா?
2.அதிக உடல் சூட்டின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுமா? 
நான் பணிபுரியும் இடம் மிகவும் சூடாக இருக்கும் அதுவும் கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம் இதனால் எனக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. ஆனால் வீட்டுக்கு வந்துவிட்டால் 
வலி குறைந்து விடுகிறது.இது எதனால் ஏற்படுகிறது..தாங்கள் இதற்கு ஒரு நல்ல ஆலோசனை கூற வேண்டும்.
  இப்படிக்கு,
   பாண்டி,//

1.அடிக்கடி சுய இன்பம் செய்வதால் சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்படுமா?
 
பதில்

இல்லை .
சுய இன்பத்தின் காரணமாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பலமுறை பதிவிட்டுள்ளேன்.அவற்றை வாசித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.அவற்றிற்கான சுட்டிகள்.

சுய இன்பம் சில சந்தேகங்களும் பதில்களும் !

சுய இன்பம் (MASTUBATION)

 

 2.அதிக உடல் சூட்டின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

பதில்
சூடான பிரதேசத்தில் வேலை செய்பவர்களுக்கு அந்தச் வெப்பம்  காரணமாக சிறு நீரகம் நேரடியாகப் பாதிக்கப்பட சந்தர்ப்பம் இல்லை. ஆனாலும் சூடான சூழல் காரணமாக உடலில் இருந்து அதிக நீர் வெளியேறுவதால் அவர்களுக்கு சிறுநீர் உருவாக்கம் குறைந்து சிறுநீர்க் கல் உருவாகலாம்.
இந்தக் கல் நீண்ட நாட்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப் படலாம். ஆனாலும் தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் கல் உருவாகுவதை தவிர்க்கலாம். ஆகவே சற்று சூடான பகுதியில் வேலை செய்யும் நண்பர்களே தாகத்தோடு வேலை செய்யாமல் போதியளவுக்கு நீர் அருந்துங்கள்.

மேலும் சில உணவுப் பழக்கங்கள் கல் உருவாகுவதை மேலும் அதிகரிக்கலாம். தக்காளி, லீக்ஸ் , போஞ்சி, பியர், சொக்கலேட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பதும்நல்லது.

     

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் .

3 comments:

சண்முககுமார் said...

அருமையான விளக்கம்

push said...

தங்களின் சேவைக்கு மிக்க நன்றி

push said...

தங்களின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது, மிக்க நன்றி