Friday, January 15, 2010

உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3
இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  • உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
  • உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
  • உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
  • உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm

6 comments:

cheena (சீனா) said...

பயனுள்ள தகவல்

பகிர்ந்தமைக்கு நன்றி

நல்வாழ்த்துகள் துமிழ்

Anonymous said...

நன்றி

ஜீவன்பென்னி said...

நன்றி

prabhadamu said...

பயனுள்ள தகவல்

Muthu Kumar N said...

Dear Tuhmizh,

Useful information.

Thank you very much. Keep it up.

Best wishes
Muthu Kumar.N

Anonymous said...

தகவலுக்கு நன்றி.... ஒரு குறுக்கு வழி உங்க எடை 170kg என்றால் அதிலிருந்து 100 ஐ கழித்தால் 70 kg வரும் இது தான் நார்மல் எடை. எப்பவோ நெட்டில் படித்தது தான். பலபேரிடம் சோதனையிட்டதில் சரியாகவே இருந்தது. நாங்கலாம் குறுக்கு புத்தி காரங்க. நன்றி.