Thursday, April 12, 2012

குழந்தை பிறந்த பின்பு எப்போது கருத்தடை முறைகள் பாவிக்கப்பட வேண்டும்




குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது பல மாதங்களுக்கு பிற்போவதுடன் கருத்தரிக்கும் சந்தர்ப்பமும் குறைவடைகிறது.இதிலே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவர்கள் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் 
குறைவடைகிறதே தவீர முற்றாக இல்லாமல் போகவில்லை .
ஆகவே ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பிறந்து ஆறு வார காலத்திலேயே ஏதாவது கருத்தடை மாத்திரையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

மாதவிடாய் நிறுத்தமும் உடலுறவும்.




மெனா போஸ் எனப்படும் நிரந்தர மாதவிடாய் நிறுத்தம் பற்றி இந்த இடுகையில் பார்த்தோம். 
ஒரு பெண்ணிலே மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்மைக்குரிய சில ஹார்மோன்களின் அளவும் குறைவடைகின்றது. இதனால் அந்தப்பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதி உலர்வடைந்து உடலுறவின்போது வலியினை ஏற்படுத்தலாம்.

இந்தப் பிரச்சினையைக் கொண்டிருக்கும் பெண்கள் வைத்தியரை நாடி குறிப்பிட்ட ஹாமொன்களை கிரீமாக  
பிறப்புறுப்புப் பகுதியிலே பூசுவதன் மூலம் தீர்வினைப் பெறலாம்.

அத்தோடு அவர்களிலே ஏற்படும் மனக் குழப்பங்கள் காரணமாகவும் உடலுறவில் விருப்பம் குறையலாம்.இவ்வாறான மனக்குழப்பங்களுக்கு உள்ளானவர்களும் வைத்தியரின் உதவியுடன் அதிலிருந்து மீளலாம். 

நிரந்தர மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு ஒரு பெண் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் முற்றாக இல்லாமல் போய் விடுகிறது.




நிரந்தர மாதவிடாய் நிறுத்தம்




பெண்களிலே மாதவிடாய் ஏற்படுவது 48-52 வயதலவிலேயே நிரந்தரமாக நின்று போகும் . இது ஆங்கிலத்திலே மெனாபோஸ்(MENAPOUSE) எனப்படும். 
ஒரு பெண்ணிலே மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்டது என்று கூறுவதற்கு அவளுக்கு தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் 
இருக்க வேண்டும். 
இவ்வாறு மாதவிடாய் நிரந்தரமாக நின்று போவதால் ஒரு பெண்ணின் உடம்பில் உள்ள சில ஹார்மோன்களின் அளவும் குறைந்து போகின்றது.
இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது.
அத்தோடு அவர்களின் என்புகளின் தடிப்புக் குறைந்து அவை பலமற்றதாக மாறக்கூடிய சந்தர்ப்பமும் அதிகரிக்கும். இவ்வாறு என்புகளின்
தடிப்புக் குறைதல் ஒஸ்டியோபோரோசிஸ்(OSTEOPOROSIS) எனப்படும். 
இந்த நிலையினால் பாதிக்கப்பட்ட என்புகள் இலகுவில் முறிந்து விடக்கூடியவை.அதாவது அவர்கள் சாதாரணமாக தடுக்கி விழும் போதே இந்த என்புகள் முறிவடையலாம்.

மேலே சொன்னவை மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு நீண்ட கால அடிப்படையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களாகும்.

இது தவீர மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலப்பகுதியில் பல அறிகுறிகள் ஏற்பட்டு பல அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

அவையாவன ,
  1. ஹாட் பிளாஷ்(HOT FLUSH) எனப்படும் உடம்பு சூடான உணர்வு .
  2. மனக்குழப்பங்கள்
  3. எரிச்சலடையும் தன்மை
  4. தூக்கமின்மை 
  5. பாலியல் உறவில் நாட்டம் குறைதல் போன்றவை .

இவ்வாறான அறிகுறிகள் காரணமாக அதிகரித்த அசௌகரியங்களை அனுபவிப்பவர்கள் வைத்தியரை நாடி உடம்பில் குறைவடைந்த ஹார்மோன்களை பாவிப்பதன் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.