கேள்வி
எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை குடிக்க வில்லை. தனியாக கறந்து கொஞ்சம் குடிக்க வைத்தேன். நான் நேரிடையாக தர முயற்சித்தால் குழந்தை பயங்கரமாக கத்தி அழுகிறது. சில பேர் கத்தினாலும் பரவாயில்லை, பட்டினி போட்டாவது தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். சிலரோ குழந்தையை கத்தவிடாதீர்கள் அதனால் இதயம் பாதிப்பு அடையும் என்கிறார்கள்.
3. தற்பொழுது தாய்ப்பால் சுரக்கவில்லை. சுரக்கவைக்க ஏதேனும் வழி உள்ளதா? மேலும் எத்தனை மாதம் வரை பால் சுரக்கும்?
4. தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவு முறை கடை பிடிக்க வேண்டும்?
விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
பதில்
ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் அந்தக் காலப் பகுதியில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் போசனைப் பதார்த்தங்களையும் தாய்ப்பால் வழங்குவதோடு குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குவதாகும்.
எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை குடிக்க வில்லை. தனியாக கறந்து கொஞ்சம் குடிக்க வைத்தேன். நான் நேரிடையாக தர முயற்சித்தால் குழந்தை பயங்கரமாக கத்தி அழுகிறது. சில பேர் கத்தினாலும் பரவாயில்லை, பட்டினி போட்டாவது தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். சிலரோ குழந்தையை கத்தவிடாதீர்கள் அதனால் இதயம் பாதிப்பு அடையும் என்கிறார்கள்.
1. நான் குழந்தை தாய்ப்பால் குடிக்க வைக்க என்ன செய்வது? வேறு வழிமுறை உள்ளதா?
2. குழந்தை பால் குடிக்காமல் இருக்க என்ன காரணம்?3. தற்பொழுது தாய்ப்பால் சுரக்கவில்லை. சுரக்கவைக்க ஏதேனும் வழி உள்ளதா? மேலும் எத்தனை மாதம் வரை பால் சுரக்கும்?
4. தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவு முறை கடை பிடிக்க வேண்டும்?
விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
பதில்
ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் அந்தக் காலப் பகுதியில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் போசனைப் பதார்த்தங்களையும் தாய்ப்பால் வழங்குவதோடு குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குவதாகும்.
ஆறுமாத காலத்தின் பின் தாய்ப்பால் தனியாக போசணையை குழந்தைக்கு வழங்கப் போதுமானதல்ல அதனால் மற்றைய உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்கத் தொடங்க வேண்டும்.
அந்த வேளையில் தாய்ப்பாலை தொடர்ந்தவாறே மற்றைய உணவுகளையும் கொடுப்பது சிறந்தது.
இருந்தாலும் நாளாக நாளாக குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தானாக ஏற்படத் தொடங்கி விடும்.
உங்கள் குழந்தைக்கு வயது எட்டு மாதம்மாகி விட்டபடியால் இனி கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றில்லை.
மற்றைய உணவுகளை போதுமான அளவுக்குக் கொடுப்பதோடு தாய்ப்பால் கொடுக்க முடிந்தால் கொடுங்கள்.
அதாவது இப்போது உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலை கொடுக்க முடியவில்லை என்று கவலைப் படுவதைவிடுத்து மற்றைய உணவுப் பதார்த்தங்களை கொடுப்பது நல்லது.அத்தோடு முடிந்தால் தாய்ப்பால் கொடுங்கள்.
பத்தினி போடுவதால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை.
எத்தனை வயதுவரை தாய்ப்பால் சுரக்கும் என்று கேட்டு இருந்தீர்கள் !
தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தால் பல வருடங்கள் வரை தாய்ப்பால் சுரக்கும்.தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய் நன்றாக தண்ணீர், பழ ரசங்களை குடிப்பது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
5 comments:
அருமையான விளக்கம் பலருக்கும் இது குறித்தான சந்தேகம் இருந்திருக்கும் இதை படிக்கும் போது நிச்சியம் தாய்ப்பாலின் நண்மையும் அது குறித்தான சந்தேகமும் தீர்ந்திருக்கும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
எனது மகனுக்கு வயது 12 நடக்கின்றது. இந்த வயதில் பால் கேட்டு அடம் பிடிக்கின்றான். கொடுக்காவிட்டால் மிகவும் மோசமாக கத்தி தரையில் பிரண்டு ரகளை பண்ணுகின்றான். நானும் சம்மாளிப்பதற்காக நான்கைந்து முறை பால் கொடுத்து விட்டடேன. அவனும் இதையே தினமும் பழக்கமாக அப்படியே நடந்துகொள்கிறான். ஆனால் அவனுக்கு இப்போது வயது 12. ஆகவே இதை தொடர்வது நல்லதல்ல என எனக்குத் தெரியும். ஆனால் என்னால் மகனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த கேள்வியை இவ்விடத்தில் கேட்மைக்கு மன்னிக்கவும். இதனை ஒதுக்கிவிடாது பதில் தரவும்....
உங்கள் சேவை மிகவும் அருமை...
தொடர வாழ்த்துக்கள்....
எனக்கு இரண்டு குழந்தைகள். இளையவனது வயது 2. அவன் இன்னும் பால்குடிப்பத விட விடவில்லை.இதைப்பாத்து இப்போது 5 வயதான எனது மகன் திரும்பவும் பால் குடிக்க ஆரமித்துள்ளான். ஆனால் அவன் பிறந்து 8வது மாதத்தில் இருந்து பால் குடிப்பதை நிருத்திவிட்டான். அடுத்த வருடம் முதல் பள்ளிக்குச் செல்ல உள்ளான். அதற்கு முதல் அதை எப்படி நிறுத்துவது.
ஏதாவது ஆலோசணை தரவும்..
அன்பின் நண்பருக்கு தங்கள் அனுமதியில்லாமல் தங்களை தளத்தை பற்றி ஒரு பதிவை எழுதியிருக்கிறேன் மன்னிக்கவும்
Post a Comment