Sunday, May 30, 2010

விறைப்புத் தன்மை / கர்ப்பத்தடை சில சந்தேகங்கள்

கேள்வி

எனக்கு 26 வயது ஆகிறது .1  வருடத்திற்கு முன்பு எனக்கு அம்மை போட்டு இருந்தது .  அம்மைக்கு பின் 1  மாதம் கழித்து நான் விறைப்பு தன்மை குறைவாக இருப்பதாக உணர்ந்தேன் . அந்த சமயத்தில் காலை விறைப்பும் சில சமயங்களில் விறைப்பு தன்மை நிறைவாகவும் இருப்பதாக  உணர்ந்தேன் .நான் விறைப்பு தன்மை குறைவதாக உணர்ந்ததில் இருந்து சில சமயங்களில் ஏற்பட்ட நிறைவான விறைப்பு தன்மையும் 2  மாதங்களுக்கு பின்பு உணரவில்லை . காலை விறைப்பும் குறைவதை உணர்ந்தேன்  .விறைப்பு தன்மை குறைவாக உணர்ந்த ஆரம்ப நாட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு உடல் அசதி , கவனமின்மை , கையை மடக்கி படுத்தால் அடிக்கடி  கை மரத்து போதல் போன்ற பிரச்சினைகள்  இருந்தது  .கடந்த ஜனவரியில்  சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன் . இப்பொழுது அதை விட சில மாதங்களுக்கு முன்பு இருந்த விறைப்பு தன்மையை விட தற்சமயம் குறைவாக உள்ளதாக உணர்கிறேன் . காலை விறைப்பும் குறைவாக உள்ளது . விறைப்பு ஏற்படும் சமயங்களில் விறைப்பாக இருந்தும்  பிறப்பு உறுப்பை தொட்டால் தான் உணர முடிகிறது.. விறைப்பு கிட்டத்தட்ட 90 டிகிரி அல்லது அதற்கு சற்று குறைவாக உள்ளது . 
ஹார்மோன் அளவு , ரத்த அழுத்தம் , சர்க்கரை ,உடல் எடை ,கொழுப்பு எல்லாம்  கட்டுப்பாட்டில் உள்ளது  .. கை மரத்து போதல் இன்று  வரை உள்ளது . இது மனப் பிரச்சினையா அல்லது உடல் சார்ந்த பிரச்சினையா என்று அறிய விரும்புகிறேன் .

உங்கள் கருத்தை நான் எதிர்பார்கிறேன் . நான் என்ன செய்ய வேண்டும் என்று. //


பதில்

அம்மை நோய் காரணமாகவோ அல்லது சிக்குன்குன்யா நோய் காரணமாகவோ விறைப்புத்தன்மை நேரிடையாக பாதிக்கப்பட சந்தர்ப்பம் இல்லை.
ஆனாலும் இரண்டுமே வைரசினால் ஏற்படும் நோயாகும் , இந்த வைரஸ் நோய்கள் குணமானாலும் உடம்பிலே ஒரு அசௌகரியமான அசதித் தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கலாம். இது post-viral fatigue எனப்படும். இங்கே
fatigue எனப்படுவது அந்த அசதித் தன்மையைக் குறிக்கும். இந்த அசதித் தன்மை சாதாரண தடிமனின் பின்பு கூட சில நாட்களுக்கு தொடர்ந்து இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இந்த அசதித்தன்மை காரணமாக பாலியல் ரீதியான ஆர்வம் சற்றுக் குறைந்து காணப்படலாம். ஆனாலும் இது நிரந்தரமானது அல்ல சில மாதங்களில் இந்த நிலைமை முற்றிலும் நீங்கிவிடும். அதுவரை நீங்கள் நன்று போஷாக்கான உணவுகளை உண்டு , போதிய உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டு , உங்கள் வேளையில் பூரணமாக ஈடுபடுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லைநண்பரே! 


..................................................................................................................................................................
கேள்வி 


டாக்டர் உங்களின் வெளிப்படையான ஆலோசனைகளுக்கு வணக்கம் கலந்த நன்றிகள்..

நான் வெளிநாட்டில் கணிணித்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.. வருஷம் ஒரு மாதம் விடுமுறை உண்டு.எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் உண்டு.. எங்களுக்கு இப்பொழது பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதில் திருப்தியில்லை,என் மனைவிக்கோ கருத்தடை மாத்திரை உட்கொண்டால் உடல் குண்டாகிவிடும் என்று பயப்படுகிறாள்.. ஆண்களுக்கான பக்கவிளைவுகளை உண்டாக்காத கருத்தடை  மாத்திரைகள் உண்டா? 
இதற்கு மாற்றுவழி உண்டா? டாக்டர்.


இப்படிக்கு 
அந்தரங்கம் கருதி பெயரை வெளியிட விரும்பாதவன் .

 நன்றி..//
பதில்


நன்றி உங்கள் பிரச்சினை நியாயமானதுதான். கருத்தடை மாத்திரை மூலம் உடல் குண்டாகும் என்பது உண்மைதான். சில ஆண்களுக்கு ஆணுறையால் திருப்தி இல்லை என்பதும் உண்மைதான்.
மாற்று வழியாக ஆண்கள் பாவிக்கக் கூடிய கருத்தடை முறைகள பற்றி கேட்டு இருந்தீர்கள். கொண்டம் தவிர ஆண்கள் பாவிக்க கூடிய கருத்தடை முறைகளாவன withdrawal   முறை எனப்படும் விந்து வெளியேறும் தருணத்தில் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியே செலுத்தும் முறை.
அடுத்ததாக ஆண்கள் செய்யக் கூடிய கருத்தடை சத்திர சிகிச்சை.
முதலாவது நான் கூறிய முறை நம்பகமற்றது, இரண்டாவது கூறிய கருத்தடை சத்திர சிகிச்சை முறை நிரந்தரமானது . உங்களுக்கு ஒரே ஒரு குழந்தைதான் உள்ள காரணத்தால் சத்திர சிகிச்சை முறை உகந்ததல்ல.


ஆனாலும் இப்போது நிறைய திருப்தி அளிக்கக் கூடிய கொண்டம்கள் கிடைக்கின்றன அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.


அல்லது உங்கள் மனைவி கருத்தடை முறையாக லூப் எனப்படும் கருவியைப் பாவித்துக் கொள்ள முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகளை விட குறைவானவை. உடற்பருமனும் அதிகரிப்பதில்லை.மேலும் இது உடல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதும் இல்லை. ஒரு வைத்தியரைச் சந்தித்து உங்கள்மனைவிக்கு லூப் பாவிப்பதே உங்களுக்கு சிறந்த முறை என்கிறேன். 

 உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பாலியல் தவிர்ந்த மற்றைய சந்தேகங்களையும் எதிர் பார்க்கிறேன்.


3 comments:

மதுரை சரவணன் said...

நல்ல பாலியல் கருத்துக்களை கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

என் நண்பர் உடலுறவை நீடிக்க , மேன் பவர் 50 கிராம் பயன்படுத்துகிறார். இது இதய நோய் உண்டாக்கும் என்றால் இல்லை என்கிறார். தங்கள் மேலான கருத்து கூறவும் ,என் நண்பணுக்கு எடுத்து சொல்ல உதவும்.

துமிழ் said...

மதுரை சரவணன் //
நல்ல பாலியல் கருத்துக்களை கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

என் நண்பர் உடலுறவை நீடிக்க , மேன் பவர் 50 கிராம் பயன்படுத்துகிறார். இது இதய நோய் உண்டாக்கும் என்றால் இல்லை என்கிறார். தங்கள் மேலான கருத்து கூறவும் ,என் நண்பணுக்கு எடுத்து சொல்ல உதவும்.//

நல்லது சரவணன்.
உங்கள் நண்பன் பாவிக்கும் மாத்திரையின் பெயர் மேன் பவர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். மேன் பவர் என்பது கம்பனி பெயராக உள்ளது (Brand name). அதாவது விஞ்ஞான ரீதியான பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை இருந்தாலும் அவர் 50mg எனும் அளவிலே பாவிக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு பார்க்கும் போது இது சில்டனபில் (Sildanafil) எனப்படும் மாத்திரை என்றே நினைக்கிறேன். இந்த மாத்திரை வேறு ஒன்றுமில்லை வயாக்கிரா எனப்படும் மாத்திரையாகும். இந்த மாத்திரை வேறு ஒரு கம்பனியால் உற்பத்தி செய்யப் பட்டு விற்கப்படும் போது மேன் பவர் என்று விற்கப்படுகிறது .

சரி இந்த வயாக்கிரா பற்றி நான் ஏற்கனவே ஒரு இடுகையில் பதிவு இட்டு இருக்கிறேன் அதில் போய்ப் பாருங்கள்.

உங்களுக்காக அந்த இடுகையை நாளை மீள் பதிவு செய்கிறேன்.
நன்றி

Nanban said...

வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ரே, என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம், என‌க்கு வ‌ய‌து 29, க‌ல‌யாண‌மாகி 2 மாத‌ங்க‌ளே ஆகிற‌து, சுய‌ இன்ப‌ ப‌ழ‌க்க‌ம் இருந்தது, இப்போது என் ம‌னைவியுட‌ன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது என‌க்கு விறைப்புத்த‌ன்மை சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் குறைவாக‌ உள்ள‌தாக‌ உண‌ர்கிறேன், என் ம‌னைவி மீது அள‌வுக்க‌ட‌ந்த‌ காத‌லை வைத்துள்ளேன், என்ன‌ குறைபாடு இது ம‌ன‌ரீதியான‌ குறைபாடா அல்ல‌து உட‌ல்ரீதியான‌ குறைபாடா? என‌க்கு திட‌காத்திர‌மான‌ உட‌ல‌மைப்புதான் ஏனெனில் நான் தின‌ந்தோரும் உட‌ற்ப‌யிற்சி செய்ப‌வ‌ன். என‌க்கு புகைப‌ழ‌க்க‌ம், ட்ரிங்க்ஸ் எப்போதாவ‌து உண்டு, நான் என்ன‌ செய்ய‌ வேண்டும்? உங்க‌ளிட‌மிருந்து ந‌ல்ல‌ ப‌திலை எதிர்பார்க்கிறேன்? ந‌ண்பா...?