Tuesday, July 26, 2011

மாதவிடாய் பிற்போகுதல்

வணக்கம் மேடம்
    நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு
முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது நிறய ரத்தம் விபத்தில் சேதமாகிவிட்டது காலில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதோடு பெல்விஸ் எனப்படும் காலும்
இடுப்பு எலும்பும் இணையுமிடத்தில் எலும்பு முறிவு அது பெட் ரெஸ்டில்
சரியாகிவிட்டது. கடந்த 3 மாதங்களூக் முன்பு வரை மாதவிடாய் சரியாக வந்து
கொண்டிருந்தது ஆனால் கடந்த 3 மாதமாக மாதவிடாய் ஆகவில்லை இதே போல்
எப்பவாவது ஒரு முறை பிரச்சணை இருக்கும் 2மாதம் மாதவிடாய் ஆகாமல் இருந்து
மறுபடி ஆவேண் ஆணால் இந்த முறை 3 மாதங்களாகியும் ஆகவில்லை. என்ன காரணம்
என்று கொஞ்சம் விளக்குங்கள் . நான் எந்த தவறும் செய்யவில்லை . கடந்த ஆறு
மாதங்களாக நன்றாக நடக்க முடியாத நிலை விபத்தின் காரணமாக தற்பொது நன்றாக
நடக்கிரேண் . கொஞ்சம் எடை கூடியுள்ளது தயவுசெய்து என்ன செய்யட்டும் என்று
என் MAIL ID கு தமிழில் பதில் அளியுங்கள்.


பதில்

நல்லது சகோதரி. 
மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் பிந்திப்போவதற்கு 
பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம்.
அதிலே முக்கியமான ஒரு காரணி மன உளைச்சல் ஏற்படுவதாகும்.கடந்த மூன்று 
மாத காலமாக உடல் சுகவீனமுற்று இருந்த உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் பிற்போகி இருக்கலாம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் பழைய நிலைக்குத் திரும்பும் போது மாதவிடாயும் சீராகும்.

ஆனாலும் உங்க்கள் உடல் நிறை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளதோடு முன்பும் 
ரெண்டு மாதமளவில் மாதவிடாய் பிந்திப் போவதாக கூறியுள்ளதால் உங்களுக்கு 
சூலக நீர்க்கட்டிகள் பிரச்சினை (PCOD)இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.


நீங்கள் ஒரு பெண் நோயியல் மகப்பேற்று நிபுணரை சந்திப்பது நல்லது.

Thursday, July 14, 2011

பித்தப் பைக்கற்கள் (Gallstone)

பித்தப் பை (Gall bladar)எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை(bile) தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும்.

இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்து
உணவு சமீபாட்டிற்கு உதவும்.

பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம்.
இவை பொதுவாக பித்தப் பைக் கற்கள் எனப்படும்.

இந்தக் கற்கள் பித்தப் பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தை
பித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே ) காணப்படலாம்.


பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.


  1. பெண்கள் 
  2. உடற் பருமனானவர்கள் 
  3. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 



பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோரிலும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேரிலே அது பாதிப்பை ஏற்படுத்த மற்றவர்கள் வாழ்க்கை முழுவதும் சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.

பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்...


  1. பித்தப்பைக் கிருமித் தோற்று 
  2. பித்தக் குழாய் அடைப்பு 
  3. சதையி அலர்ச்சி 



இந்தக் கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவற்றினால்
ஏற்படும் பாதிப்புக்களும் வேறுபடலாம்.

பித்தப் பைக் கற்களினால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்க மேல் மூலையில் ஏற்படும். இந்த வலியானது தோற்பகுதிக்கு பரவிச் செல்லுவது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தும்.

பித்தப் பைக் கிருமித் தோற்று ஏற்பட்டவர்களில் காய்ச்சலும் ஏற்படும்.

பித்தப் பைக் குழாயில் பூரணமான அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பித்தப் பொருளான பிலிரூபின்(bilirubin) அதிகரித்து யோண்டீஸ் (jaundice)கண் மற்றும் உடல் மஞ்சள் ஆகும் என்ற நிலையம் ஏற்படும்.

மருத்துவம்

பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை.

வலி அல்லது வேறு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கு எந்தவிதமான
மருத்துவமும் தேவை இல்லை.

பித்தப் பை கிருமித் தொற்று, அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்படுபவர்களுக்கு
பித்தப் பைக் கற்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கான சத்திர சிகிச்சையின் போதுகற்களோடு சேர்த்து பித்தப் பையும் அகற்றப்படும்.

பித்தப் பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் கல் உள்ளவர்களுக்கு நேரடியாக கல் மட்டுமே அகற்றப்படலாம் . இது வாய் வழியின் ஊடாக கமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி செய்யப்படலாம்.


பித்தப் பை அகற்றபடும் சத்திர சிகிச்சையானது இப்போது வயிற்றை வெட்டாமல் சிறிய துளை ஏற்படுத்தி செய்யப்படும் லப்பிரஸ்கோபி (Laparascopy) மூலம் இலகுவாக செய்யப்படலாம்.

பித்தைப்பை அகற்றப்பட்ட பின்பு  கூட ஒருவர் எந்தப் பாதிப்பும் இல்லமால் சாதரணமாக வாழலாம்.