இந்த நோய் பொதுவாக எலியில் இருந்தே மனிதனுக்குத் தொற்றும்.எலியில் இருந்து பக்டீரியாக் கிருமிகள் அதன் சிறுநீர் மூலம் நீரை சேரும்.இவ்வாறு பக்டீரியாக்கள் கலந்த நீர் எமது தோளிலே உள்ள சிறிய காயங்கள் மூலம் எமக்குத் தோற்றி நோயினை ஏற்படுத்தும்.இதனால் இது நீரிலே வேலை செய்யும் விவசாயிகள் ,பண்ணை யாளர்களுக்கே அதிகம் ஏற்படக்கூடிய
சந்தர்ப்பம் உள்ளது.ஆனால் குளங்களில் குளிப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்..
அறிகுறிகள்
இரண்டு கட்டமாக இதன் தாக்கம் ஏற்படலாம்.
முதற்கட்டம்
காய்ச்சல்,தலையிடி உடம்பு வலி ,குளிர் மற்றும் கண்கள் சிவத்தல்.இது சற்று சுகமாகுவது போன்ற உணர்வு ஏற்பட்டு மீண்டும்
சில நாட்களில் இரண்டாம் கட்ட பாதிப்பு ஏற்படும்
இரண்டாம் கட்டம்
இந்த நிலையில் ஆரம்ப அறிகுறிகள் மீண்டும் தொடங்குவதோடு மேலும் தீவிரமான பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இதன் போது இது ஈரல் ,சிறுநீரகம், மூளை,இதயம் போன்றவற்றை பாதிக்கலாம்.
ஈரல் பதிப்பதால் கண்கள் மஞ்சலாகலாம்(jaundice).
சிறுநீரக பாதிப்பால் சடுதியான சிறுநீரக செயல் இழப்பு ஏற்படலாம்.
மருத்துவம்
இது பாக்டீரியாவினால் நோய் என்ற படியால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப் பட்டால் அன்டி பயட்டிக்ஸ் மூலம் குணப்படுத்தப் படலாம்.
இது தவிர சிருகீரக் பாதிப்பு ,ஈரல் பாதிப்பு ஏற்படவர்களுக்கு மிகவும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்புத் தேவை.
1 comments:
நல்ல மருத்துவ கட்டுரை.தமிழ்மணம் டாப் 20 பிளாக் லிஸ்ட்டில் 5 வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
Post a Comment