பார்த்து விட்டுப் போவோம் .இது சாதாரண நிகழ்வு.
இதுவே அதிகமானால்?
அதாவது நீங்கள் வெளியே புறப்பட்டு சிறிது தூரம் போனவுடன் சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் போய்ப் பார்த்து விட்டு திரும்பவும் கொஞ்ச தூரம் போனவுடன் அதே சந்தேகம் ஏற்பட மீண்டும் போய் பூட்டைப் பார்ப்பதாக மீண்டும் மீண்டும் பல முறை செய்வது ஒரு மன நோய்.இது Obsessive-Compulsive Disorder எனப்படும்.
Obsession எனப்படுவது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிந்தனைகளைக் குறிக்கும் அதாவது வீடு பூட்டினோமா ? கை கழுவிநோமா? கையில் ஏதோ
கிருமி இருக்கிறதா? இவ்வாறு பல விதமாக மீண்டும் மீண்டும் சிந்தனைகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது Obsession எனப்படுகிறது.இந்த சிந்தனைகள்
மீண்டும் மீண்டும் ஏற்படுவது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பாதிப்பதுடன் அவரினால் கட்டுப் படுத்த முடியாதவையாகவும் இருக்கும்.
compulsion எனப்படுவது அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனை -களுக்கு அச்சப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்தல்.அதாவது கையில் ஏதோ கிருமி இருக்கிறது என்று சிந்தனை எழுபவர்கள் மீண்டும் மீண்டும் கை கழிவிக் கொண்டே இருப்பது போன்றவை.இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை சில உதாரணங்களே .இது போல அவர்களுக்கு பல்வேறுவிதாமான சிந்த -னைகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.
தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சிந்தனைகள் தொடர்ச்சியாக ஏற்படும். தீவிரம் குறைந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாமல் விட்டு விட்டு சில காலங்களில் மட்டும் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மன நல வைத்தியரின் ஆலோசனையுடன் மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் மன நிலை ரீதியாக நோயாளிக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப் படுத்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கு சரிவராவிட்டால் மருந்துகள் பாவிக்கப்படும்...
0 comments:
Post a Comment