Sunday, November 28, 2010

மூட்டு வாதம்-Rheumatoid arthritis

ஆங்கிலத்திலேயே ரூமடோயிட் ஆர்த்திரைட்டீஸ் என்று அழைக்கப்படும் இந்த மூட்டுகளை தாக்கும் நோய் பொதுவாக சிறிய மூட்டுகளையே தாக்கும்.

அதிகமாக விரலில் உள்ள மூட்டுகளையே தாக்கும். அதைத் தொடர்ந்து மற்றைய மூட்டுகளையும் தாக்கலாம்.

இதன் இயல்புகள் 

1.கைவிரல் மூட்டு போன்ற சிறிய மூட்டுகளையே பொதுவாக பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
2.மூட்டுகள் சமச்சீரான முறையில் பாதிக்கப்படும்.அதாவது உடலின் இருபக்கமும் உள்ள ஒரே வகையான மூட்டுகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் 
3.ஒரே நேரத்தில் பல (நான்கிற்கு மேற்பட்ட) மூட்டுகளில் வலி ஏற்படும்

மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பு

வலி
மூட்டு வீக்கம்
காலையில் இறுகிய நிலை(morning stiffness)
முழங்கைக்கு சற்றுக் கீழாக சிறிய கட்டிகள் காணப்படுதல் (rheumatoid nodules)




       Rheumatoid nodules 

மூட்டுவாத நோயென தீர்மானிக்க இந்த பாதிப்புக்கள் பொதுவாக ஆறு வார காலத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.இந்த நோய் தீவிரமாக(active) இருக்கும் நேரத்தில் சிறிதளவான காய்ச்சல் ஏற்படலாம்.

இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் தொடர்ச்சியாக நோவினைக் கொடுக்காமல் விட்டு விட்டே பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நோயாளிகளுக்கு இரண்டு விதமான மருந்துகள் கொடுக்கப்படும்.

1. நோயினால் ஏற்படும் வலியினை கட்டுப்படுத்தும் மாத்திரைகள்-
 வலி இருக்கும் போது மட்டுமே பாவிக்கப்பட வேண்டும் 

2.நோய் தீவிரமடைவதைத் தடுக்கும் மாத்திரைகள்-
இவை தொடர்ச்சியாக பாவிக்கப்பட வேண்டும் .

இந்த நோய் பூரணமாகக் குணப்படுத்தப் பட முடியாதது. ஆனால் இது மாத்திரைகள் மூலம் கட்டுப் படுத்தப்படலாம்.

இந்த நோய் உள்ளவர்கள் விடுகின்ற மிகப் பெரிய தவறு ஆரம்ப காலத்தில் நோய் தீவிரமாக உள்ள நேரத்தில் மட்டும் மாத்திரைகளை உட்கொண்டு வலி மறைந்தவுடன் மாத்திரைகள் பாவிப்பதை விட்டு விடுதல்.
அவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாகிக்  கொண்டே போவதோடு இறுதியில் மூட்டுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்.

நிரந்தரமாக பாதிக்கப்பட்ட மூட்டுக்கள்






1 comments:

வசந்தன் said...

யூஸ்ஃபுல் நீயூஸ் நன்றீ