இது ஆண்களைவிட பெண்களையே அதிகமாகத் தாகும். இளம் வயதிலேயே இது அதிகமாக ஏற்படும்.வயது போகப் போக இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறையும்.
இந்த நோயின் தன்மை,தீவிரம் என்பவை ஆளுக்கு ஆள் வேறுபாடும். அத்தோடு இந்த தாக்கம் ஏற்படும் இடைவெளியும் ஆளுக்கு ஆள் வேறுபாடும்.
அதாவது சில பேரிலே ஏற்படும் தலையிடி தீவிரமானதாக இருப்பதோடு அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளையும் பாதிக்கலாம்.சில பேரிலே பல வருடத்திற்கு ஒருமுறையே இந்த நோய் தாக்கும் அதே வேளை சில பேரில் அடிக்கடி அத்தாக்கம் ஏற்படலாம்.
இந்த நோய் உள்ள சில பேரிலே தலையிடி தொடங்குவதற்கு சில மணித்தியாலங்களுக்கு (24மணித்தியாலம் வரை) சில மாற்றங்கள் ஏற்படலாம்.அவை Aura எனப்படும்.அவை தலையிடி தொடங்கப்போகுது என்பதற்கான அறிகுறி என்று அவர்களால் உணரக்கூடியதாக் இருக்கும்.
அவ்வாறான மிக்க்ரேயினுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்,
- தாகம் அதிகரித்தல்
- மனிநிலை மாற்றம்
- உடம்பிலே சக்தி கூடிய உணர்வு
- பலவீனமான உணர்வு
- பசியிலே மாற்றம் (கூடுதல்/குறையுதல்)
இவ்வாறு வேறுபட்ட உணர்வுகள் தலையிடி தொடங்குவதற்கு முன் எச்சரிக்கை உணர்வாக ஏற்படலாம்.
இவ்வாறான எச்சரிக்கை உணர்வோடு ஏற்படுகின்ற மிக்ரேயின் கிளாசிக்கல் மிக்ரேயின்(classical migraine) எனப்படும்.ஏனையவை common migraine எனப்படும்.
மிக்ரேயினின் அறிகுறிகள்..
- தலையிடி
- வாந்தி/வாந்தி வருவது போன்ற உணர்வு
- பார்வை மங்குதல்
- வெளிச்சத்தில் இருந்தால் தலையிடி கூடுதல்
- குறிப்பிட்ட சில பதார்த்தங்களின் மணம் வலியை அதிகரித்தல்
- களைப்பாக உணர்தல்
- வியர்த்தல்
- குளிராக உணர்தல்..
ஒவ்வொரு தடவை மிக்ரேயின் தாக்கும் போதும் இது சில மணிநேரங்கள் தொடக்கம் மூன்று நாட்கள் வரை தொடரலாம்.
சில விடயங்கள் மிக்ரேயின் ஏற்படுவதைத் தூண்டலாம். ஆகவே எந்த விடயத்தால் மிகிரேயின் அதிகரிக்கிறதோ அதை நோயாளி தவீர்த்தல் வேண்டும்.
நோயைத் தூண்டக் கூடிய விடயங்கள்.
- சிலவகை உணவுகள்
- சில வகையான மணங்கள்,அதிகமான சத்தம், வெளிச்சம்
- சில காலநிலை மாற்றங்கள்
- அதிகரித்த வேலைப் பளு
- புகைத்தல்
- சில வாசனைத் திரவியங்கள்
- போதிய உறக்கமின்மை
- மாதவிடாய்
- சாப்பாடுகளைத் தவற விடுதல்(நேரத்திற்கு சாப்பிடாமை)
ஏனைய விடயங்கள் அடுத்த இடுகையில்.......
3 comments:
மிக பனுள்ள தகவல்,
அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறொம்.
Thanks doctor plz cöntinue . Same problem i have . I felt the heavy pain when i was n high tension and pressure , travel , sound . Particularly side of the left eye . That time i touched side of eye portion i came to feel the difference in the veins function like heartbeat .still i didnt check with doctor.
Thanks doctor plz cöntinue . Same problem i have . I felt the heavy pain when i was n high tension and pressure , travel , sound . Particularly side of the left eye . That time i touched side of eye portion i came to feel the difference in the veins function like heartbeat .still i didnt check with doctor.
Post a Comment