உதாரணமாக காய்ச்சல், அதிகமான வாந்தி, சூரிய ஒளியை பார்க்க முடியாத நிலையோடு தலையிடிஏற்பட்டால் அது மூளைக் காய்ச்சலாக இருக்கலாம்.
தலையிடி ஏற்பட்டவர்கள் சாதாரணமாக பரசிட்டமோல், டிஸ்பிரின் போன்ற எளிய வகை நோய் நிவாரணிகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கலாம்.ஆனாலும் கீழே உள்ள அறிகுறிகளோடு தலையிடி ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
1.தலையிடியோடு அதிகமான வாந்தி, சூரிய ஒளியை பார்க்க முடியாத நிலை, கழுத்தை வளைத்து கீழே பார்க்கும் போது வலியுடன்கழுத்து இறுகிய நிலை உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும்.
2.அண்மையில் உங்களுக்கு தலையிலே அடி பட்டிருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும்.
3.தலையிடியோடு கைகால் உணர்ச்சி குறைந்த நிலை ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைப் பார்க்க வேண்டும்.
4.தலையிடியோடு ,அதிகாலை நேர வாந்தி மற்றும் இருமும் போதோ மலம் கழிக்கும் போது தலையிடி அதிகரித்தல்
மேலே சொன்ன 4 சந்தர்ப்பத்திலும் எவ்வளவு விரைவாக வைத்தியரைப் பார்க்க முடியுமோ அவ்வளவு விரைவாகப் பார்க்க வேண்டும்.
5.தலையிடியோடு மனக் குழப்பம் ஏற்பட்டால்
6.தலையிடியோடு காது /கண் வலி ஏற்பட்டால்
7.வழமையை விட தலையிடி தீவிரமானதாக இருந்தால்
8.முதன் முறையாக தலையிடி ஏற்பட்ட ஒருவர்
9.திடீரென தலையின் ஒருபக்கத்தில் உள்ளே இடிப்பது போன்ற உணர்வு
மேலே உள்ள அறிகுறிகள் இருப்பவர்கள் சாதாரண வலிநிவாரநிகளோடு வீட்டில் இருந்துவிடாமல் வைத்தியரைப் பார்க்க வேண்டும்.
1 comments:
Me the first . Very useful post.Must everyone known this.Thank you very much for posting this article.
Post a Comment