கேள்வி
hi doctor...
first of all i have to salute you for doing a great job,
i never miss to read your blogs..
doctor,
this is my problem,
i hv irregular period cycle..
it results in my pregnancy.
therefore,
i had an operation called..
(minilap + ovarian drilling + dye test )4 months ago,
still no progress..
my doctor said,
this operation will long last for a year..
so he asked me to reduce my weight,
now i am 26 years old.my weight is 61 kgs,my height is 168 cm.
now take metformin.
also i take duinum while my periods.
so please doctor,
tell me what is my problem?
how can i over come from this?
dont ignore my mail doctor..
i am waiting for your reply,
thanks,,,
(டாகடர் எனக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பதோடு குழந்தை உருவாகுவதும் தாமதமாகிறது.இதற்காக எனக்கு ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டதோடு இப்போது மெற்போர்மின் மாத்திரை எடுக்கிறேன் .எனது உடல் நிறையைக் குறைக்கச் சொல்லி வைத்தியர் சொல்கிறார்.நான் இன்னும்
கருத்தரிக்கவில்லை. )
பதில்
சகோதரி உங்களுக்கு பொலி சிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்(polycystic ovarian disease) என்ற நோய் உள்ளது. அதாவது உங்கள் சூழகங்களில் (ovary)நீர்க் கட்டிகள் சேர்ந்துள்ளன.இது பற்றி விரிவான விளக்கங்களை இந்த சுட்டியில் பார்க்கவும்.
இந்த நோய் பெண்களிலே பொதுவாகக் காணப்படும் நோய் என்றாலும் சில பேரிலேயே குழந்தையின்மைஎன்ற நிலையை ஏற்படுத்தும்.அப்படிப் பாதிக்கப் பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள்.
உங்களுக்குச் செய்யப் பட்ட சத்திர சிகிச்சை மூலம் அந்த நீர்க்கட்டிகள் உடைக்கப் பட்டிருப்பதோடு இந்த நோய் தவீர குழந்தையின்மையை ஏற்படுத்தக்கூடிய வேறு காரணிகள் இல்லை என்பதும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கும்.
இவ்வாறு நீர்க் கட்டிகள் உடைக்கப் படுவது குழந்தை உருவாக்கத்தை அதிகரிக்கும்.அத்தோடு மெற்போர்மின் மாத்திரையும் குழந்தை உருவாக்கத்தை அதிகரிக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமாக நீங்கள் உங்கள் உடல் நிறையைக் குறைக்க வேண்டும்.
அதற்காக போதிய உடற் பயிற்சி செய்வதோடு டயட்டீசியன் எனப்படும் உணவு நிபுணர் ஒருவரை ஆலோசித்து சரியான உணவுப் பழக்கத்தை கடைப் பிடியுங்கள்.
உங்களுக்கு இப்போதுதான் 26 வயது என்ற படியால் முயற்சி செய்வதற்கு இன்னும் போதிய அவகாசம் உள்ளது.
மேலும் நீங்கள் மாதவிடாய் காலத்தில் எடுப்பதாக கூறும் மாத்திரை சூலகத்தில் முட்டை உருவாக்கத்தை தூண்டும் மாத்திரை. இந்த மாத்திரையை நீங்கள் மாதவிடாய் தொடங்கி இரண்டாவது நாள் தொடக்கம் ஐந்து
நாட்களுக்கு மாத்திரமே உட்கொள்ள வேண்டும்.பின்பு மாதவிடாய் தொடங்கிய நாளில் இருந்து 11 தொடக்கம் 12நாட்களுக்கு ஒவ்வொருநாளும் உறவில் ஈடுபடுங்கள்.
இவ்வாறு குறைந்தது 6 தொடக்கம் 12 மாதங்களுக்கு முயற்சித்த பின் தொடர்ந்தும் கருத்தரித்தல் பிற்போனால் அடுத்த கட்டமாக IUI எனப்படும் செயற்கையாக விந்து செலுத்தும் முறை மூலம் முயற்ச்சிக்கலாம்.இது பற்றி இந்த இடுகையில் பார்க்கவும்.அது எப்போதுமேற்கொள்ளப்பட வேண்டும் என்று உங்கள் வைத்தியர் தீர்மானிப்பார்.
உங்களுக்குரிய அனைத்து மருத்துவமும் சரியாக வழங்கப்பட்டுள்ளது ஆகவேவிரைவில் கருத்தரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.
4 comments:
குழந்தையின்மை தொடர்பான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது !!!
தொடரட்டும் மகத்தான பணி
My size of penis is when erected 3-4 Inches only. Is it normal or am I having a problem? I'm 25 years old.
pls advise.
துமிழ் said...
sakthi said...
குழந்தையின்மை தொடர்பான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது !!!
தொடரட்டும் மகத்தான பணி
November 27, 2010 1:11 AM
//
கருத்துக்கு நன்றி சகோதரி
Anonymous said...
My size of penis is when erected 3-4 Inches only. Is it normal or am I having a problem? I'm 25 years old.
pls advise.//
read this article
http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_8650.html
Post a Comment