நட்சத்திர வாரத்தின் இறுதி இடுகை.
இந்த வாரம் எனது தளத்தை நட்சத்திர தளமாக்கி , எனது எழுத்துக்கு முதல் அங்கிகாரம் அளித்துள்ளதோடு, எதிர்வரும் வாரத்தில் தினக்குரல் பத்திரிகையில் எனது தளத்தை அறிமுகப் படுத்தவும் உள்ளது யாழ் தேவி திரட்டி.
இதற்காக யாழ்தேவி திரட்டிக்கும் , தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் சநதிப்போம் .....
Sunday, December 20, 2009
சாராயத்தில் கருகிய ஈரலின் படங்கள்.
சாராயம் மனித உடலின் ஏராளமான பாகங்களை பாதித்தாலும், அது பிரதானமாக பாதிப்பது ஈரலை.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது
இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.
சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.
அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.

குடியால் பாதிக்கப்பட்ட ஒரு ஈரலும் பாதிக்கப்படாத ஒரு ஈரலும்
ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் , என்பதும் குடிக்கத்தொடங்கிய ஒருவர் அதற்கு அடிமை ஆகுவிடுவாரா அல்லது இடையில் குடியை விட்டு விடுவாரா என்பது அவரின் உடலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று .
அல்ககோல் தீகைட்ரநேஸ் (alcohol dehyrdranase ) என்ற நொதியம்தான் சாராயாத்தை சமிபாடு அடையச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுவது, இந்த நொதியம் அதிகம் உள்ளவர்கள் அதிகம் குடிக்கும் போதே அவர்கள் எதிர்பார்க்கும் போதை அடைவார்கள் ,நொதியம் குறைவாக இருப்பவர்கள் குறைவாகத்தான் குடிக்க முடியும் .
மற்றும் தொடர்ச்சியாக குடிக்கும் ஒருவரில் இந்த நொதியம் பழக்கப் பட்டு போவதால் நாளுக்கு நாள் அவர் குடிக்கும் அளவும் அதிகரித்துக் கொண்டே போகும்.

சிரோசிஸ் ஏற்பட்ட ஒரு ஈரல்
அதைப் போல் ஒருவர் மதுவுக்கு அடிமை ஆவதும் , அதை இடையில் விட்டு விடுவதும் நம் மனத்துக்கு அப்பால் பரம்பரை(gene) அலகுகளாலும் தீர்மானிக்கப் படுகிறது.
கவனம் உங்கள் பரம்பரை (gene) அழகின் படி நீங்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகும் தன்மை கொண்ட பரம்பரை அலகைக் கொண்டவர் எனில் உங்கலாளால் கடைசி வரை குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமலேயே போய் விடலாம்.
அதை போல் சும்மா ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து பார் , எதையும் அனுபவித்து வைக்க வேண்டும் என்று யாரையும் குடிக்கத் தூண்டாதீர்கள். பிறகு உங்களால் கூட நிறுத்த முடியாத குடி காரர்கள் ஆகிப் போகலாம் அவர்கள்.

Friday, December 18, 2009
நீங்கள் கர்பமாகி இருப்பதை நீங்களே உறுதிப் படுத்திக் கொள்வது எப்படி ?
(மீள் பதிவு )
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.
உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.
பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே பெரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.
இதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.
அந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)
நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.
பின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

செயற்கை இதயங்களின் படங்கள்

உடல் ஒரு தொழிற்சாலை , அந்த தொழிற்சாலை இயக்கத்துக்கு சக்தி வழங்குனர்களை அனுப்பி, பின் கழிவுகளை வெளியேற்றும் பங்கினை செய்யும் முக்கிய முதலாளி நம் இதயம்.
இந்த இதயம் பாதிக்கப் பட்டால் ஆரம்பத்தில் சில மருந்துகளை கொடுத்தும், இதய துடிப்புக்கு வெளியில் இருந்தான வேறு துணைச் சக்திகளை கொடுத்தும் இதயத்தின் தொழிற் பாட்டை தொடரச் செய்யலாம். ஆனாலும் இறுதிக் கட்ட இதய நோய்களுக்கு ஒரே தீர்வு இதய மாற்று சிகிச்சைதான்.
இந்த இதய மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு வசதிகள் இந்தியாவில் கூட உள்ளன ஆனாலும் என்ன வசதி இருந்தாலும் மாற்றி வைப்பதற்கு இதயம் தேவையே. சத்திர சிகிச்சை செய்வதற்கு வசதி இருந்தும் மாற்று இதயம் கிடைக்காததால் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டதே செயற்கை இதயம். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள எந்த செயற்கையான இதயமும் முழுவதுமாக ஒருவரின் வாழ் நாளில் நிலைத்திருக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.
இந்த செயற்கை இதயமானது ஒருவரின் இதயம் முற்றாக செயல் இழந்த பிறகு அவருக்குரிய மாற்று இதயம் கிடைக்கும் வரை அவரை வாழச் செய்வதற்காகவே பயன்படுத்தப் படுகின்றன.

ஆனாலும் வெகு விரைவில் , மனிதர்களை வாழ் நாள் முழுவதும் வாழச் செய்யும் வல்லமை கொண்ட இதயங்கள் கண்டு பிடிக்கப் படத் தான் போகின்றன.
Thursday, December 17, 2009
ஆண்கள் பூபடைவது எப்படி ?
(மீள் பதிவு)
பெண்கள் பூப்படைதல் பற்றி ஒரு முந்திய இடுகையில் பார்த்தோம் இனி ஆண்களைப் பற்றி பார்ர்ப்போம்.
பெண்கள் பூப்படையும் காலம் . 8 தொடக்கம் 14 வயது வரை. ஆனால் ஆண்கள் பூப்படையும் காலம் 9 தொடக்கம் ௧௫ வயது வரை.இங்கேயும் பெண்கள்தான் பெஸ்ட்.
பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதிகளின் (testis) முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்று பெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும் , அத்தோடு ஆணுறுப்பும் சற்று பெரிதாகும்.
தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். ஆனால் பெண்களில் இருந்து வேறுபடும் முகமாக முகம் நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு மயிர் வளரத் தொடங்கும்.
ஆண்களுக்குரிய புஜ , மற்றும் நெஞ்சு அமைப்புக்களும் உறுதியாகும்.
பெண்கள் மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்கள் விந்துகளை வெளியேற்றத் தொடங்குவார்கள்.
இந்தக் காலகட்டத்தில் ஆண்கள் சுய இன்பம் போன்ற செய்கைகள் மூலம் விந்துகளை வெளி ஏற்றத் தொடங்குவார்கள். சில வேளைகளில் தானாகவே விந்துகள் வெளியேறும் குறிப்பாக அதிகாலை வேளையில். இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.
பூப்படையும் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப் படவேண்டியது சுற்றத்தாரின் கடமையாகும்.
பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் சடுதியான வளர்ச்சியைக் காண்பிப்பார்கள்.
இங்கே பெண்கள் முதலில் பூப்படையத் தொடங்க்குவதாலே சிறுவயதி ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சற்று உயர்வாக இருக்கக் காரணமாகும்.
.......................................................................................................................................................................
சந்தேகங்களைக் கேளுங்கள் !

நீங்களும் நாடி பிடித்துப் பார்க்கலாம்.(வீடியோ விளக்கம்)
நான் தமிழிலே மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகளை வாசித்தாலோ , வானொலி அல்லது தொலைக்காட்சிகளில் மருத்துவம் சம்பந்தமான விடயங்களை கேட்கும் போதோ அடிக்கடி காண்கின்ற ஒரு பிழையான சொல்பிரயோகம்`நரம்பு`.
உண்மையில் நரம்பு என்பது நமது உணர்ச்சிகளைக் கடத்தும் ஊடகமாகும்.அதாவது இது குழாய் போன்ற ஒரு அமைப்பல்ல , வெறும் கம்பி போன்ற அமைப்பு.
மின்சாரம் கம்பியினூடாக பாய்வதைப் போல நாம் உணர்கின்ற வலி, சூடு, தொடுகை உணர்ச்சி என்பவை இந்த நரம்பினூடாக கடத்தப்படுகின்றன.
இந்த நரம்புகள் ரத்தத்தை கடத்தும் குழாய்கள் அல்ல.
நான் அண்மையில் ஒரு வானொலியில் ஒளிபரப்பான செய்தியில் ஒரு பிரபலமானவர் மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் நரம்பு வெடித்துச் செத்துப் போனதாகச் சொல்லப்பட்டது. நரம்புகள் எப்படி ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன என்று அந்த செய்தி ஆசிரியரிடம்தான் கேட்க வேண்டும்.
சினிமாக்களில் கூட இவ்வாறு பிழையாக இந்த வார்த்தை பிரயோகிக்கப் படுவதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள்.
உண்மையில் ரத்தத்தைக் காவிச் செல்லும் குழாய்கள் `ரத்தக் குழாய்கள்` என்றே சொல்லப்பட வேண்டும் . உடலில் இரண்டு வகையான ரத்தக் குழாய்கள் உள்ளன .
ஒன்று ரத்தத்தை இதயத்தில் இருந்து உடலின் மற்றம் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் குழாய்கள். இவை தமிழிலே நாடி எனப்படும்.
மற்றைய வகை உடலின் வெளிப்புறப் பகுதியில் இருந்து இதயத்திற்கு குருதியைக் கொண்டு செல்பவை நாளம் எனப்படும்.
உங்கள் உடலிலேயும் சில குருதிக் குழாய்கள் தோலின் கீழ் தெரியலாம். அவையே நாளங்கள்.நாடிகள் எப்போதும் தோளுக்கு ஆழமாகவே செல்வதால் வெளியில் தெரிவதில்லை. ஆனால் நாடிகள் இதத்தில் இருந்து குருதியைக் கடத்தும் குழாய்கள் என்பதால் இதத்துடிப்பின் போது இந்த நாடிகளில் நாம் துடிப்பை உணரலாம். இவையே நாடித்துடிப்பு எனப்படும்.
நாளங்கள் துடிப்பதில்லை.
உங்கள் நாளங்களில் நீங்கள் கை வைத்துப் பாருங்கள் எந்தத் துடிப்பும் இருக்காது.
சரி ஒருவரின் நாடித்துடிப்பை எப்படி பிடித்துப் பார்ப்பது என்று இந்த வீடியோவைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
ஆகவே இனி நரம்பு வெடித்து செத்துப் போனார் என்று பிழையான வார்த்தை பிரயோகத்தை விட்டு குருதிக் குழாய் வெடித்துச் செத்துப் போனார் அல்லது நாடி வெடித்துச் செத்துப் போனார் என்று சொல்லப் பழகுவோம்.

Wednesday, December 16, 2009
வலியே இல்லாமல் ஏற்படும் மாரடைப்பு
நாம் எல்லோரும் மாரடைப்பு என்றாலே தாங்கமுடியாத வலியோடுதான் ஏற்படுகின்றது என்று நினைப்போம்.
உண்மையில் மாரடைப்பு ஏற்படும் எல்லோருக்கும் வலி ஏற்படுமா?
இல்லை
சில நீரழிவு நோயாளிகளிலே வலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம்.
நீரழிவானது கட்டுப் பாட்டில் வைத்திருக்கப் படாவ்விட்டால் உடலின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.நீரழிவு நோயானது நரம்புத் தொகுதியை பாதிக்கும் போது நமக்கு வலியினை உணரும் சக்தி இல்லாமல் போகின்றது.
உதாரணத்திற்கு நீரழிவு நோயாளி ஒருவரின் கால்களிலோ அல்லது கைகளிலோ விறைப்புத் தன்மை / உணர்ச்சியற்ற தன்மை ஏற்படுகிறது என்றால் அவரின் நரம்புத் தொகுதி பாதிக்கப் படுகின்றது என்று அர்த்தம்.
இவ்வாறு உணரும் தன்மை அற்றுப் போனபின் அவர்களின் காலில்/ கையில் காயம் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.
உணர்ச்சி அற்ற தன்மையால் அவர்களால் ஏற்படுகின்ற காயங்களை உணர முடியாது போக அந்தக் காயத்தின் மீது அவர்களின் கவனிப்பும் அற்றுப் போகின்றது. இறுதியில் அவர்கள் தங்கள் அவயத்தையே இழக்க வேண்டி ஏற்படுகின்றது.
இதற்காக நீரழிவு நோயாளிகள் ஒவ்வொருவரும் தங்கள் பாதங்களை ஒவ்வொரு நாளும் அவதானிக்க வேண்டும் அவற்றிலே ஏதாவது காயம் இருக்கிறதா என்று.
மேலும் அவர்கள் தங்கள் கால்களை சுத்தமாக கழுவி உலர்ந்த நிலையில் பேன வேண்டும்.
இவ்வாறு உணரும் தன்மை அற்ற நபர்களில் சில வேளை மாரடைப்பு ஏற்படும் போது கூட அவர்களால் உணர முடியாமல் போய் விடுகின்றது.சடுதியாக எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படும் இறப்புக்களுக்கு இந்த வலியில்லாமல் ஏற்படுகின்ற மாரடைப்புக்களும் காரணமாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் தடுக்க இலகு வழி ரத்தத்தில் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான்.

ஆணுறுப்பின் அளவிலா ஆண்மை உள்ளது ?
ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கும் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றான்.
தன்னுடைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.
அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம்பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகிறது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வயதினையுடைய இன்னொரு நண்பனின் ஆணுறுப்பைப் பார்க்க நேரும் போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை மற்றவர்களின் அளவோடு ஒப்பிட முனைகின்றான்.
அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவே ஒருவரின் ஆண்மைத்தன்மையினை தீர்மானிக்கிறது என்ற பிழையான எண்ணம் உருவாகத் தொடங்குகிறது. தன் ஆணுறுப்பின் அளவு சிறியது என்ற தாழ்வு மனப் பான்மை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவன் பாலியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.
உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை.
விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.
விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட அடையும்.
அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும்.
ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும்.
ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.
அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது.
ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடு படும் போது இன்பம் கிடைக்கிறது.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்
ஆண்கள் பிழையாக புரிந்து கொண்டு அச்சப்படும் விடயங்களில் ஒன்று அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.
அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் .
உண்மையில் இது வெட்கப் பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விடயம் அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.
அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகம் ரத்தம் போவதாலே இது ஏற்படுகின்றது.
இந்த விறைப்புத் தன்மையுட சில வேளைகளில் விந்து நீர் வெளியேற்றமும் இயல்பாக ஏற்படலாம்.
இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது தங்களால் உடலுறவின் போது சரியான விறைப்பினை அடையமுடியவில்லை எனும் ஆண்களிலே உண்மையான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு இது உதவுகின்றது.
அதாவது ,நான் ஏற்கனவே ஒரு இடுகையில் கூறிய படி ... எனப்படும் சரியான விறைப்பினை அடையா முடியாதத்திற்கு முக்கிய காரணம் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இவ்வாறு தங்களால் சரியான விரைப்புத்தன்மையை அடைய முடியவில்லை எனும் ஆண்களின் ஆணுறுப்புக்கள் மற்ற ஆண்களைப் போல அதிகாலையில் தானாக விறைககுமானால் , அதன் அர்த்தம் அவர்களின் உடலிலோ அல்லது ஆணுருப்பிலோ எந்த விதமான பிரச்சினையும் இல்லை , உளவியல் பிரச்சினைகளாலே உடலுறவின் போது அவர்களின் ஆணுறுப்புக்கள் விறைக்க மறுக்கின்றன என்பதாகும்.
அதைவிடுத்து உடலுறவின் போது ஆணுறுப்பு விரிக்கவில்லை எனும் ஆனில் இந்த அதிகாலை விறைப்பும் ஏற்பட வில்லை என்றால உளவியல் பிரச்சினைக்கு அப்பால் அவரின் உடலிலே வேறு பிரச்சினை இருக்கலாம் .
ஆகவே ஆண்களே உங்களுக்கு அதிகாலை விறைப்பு மற்றும் விந்து நீர் வெளியேற்றம் ஏற்பட்டாலோ அச்சப்பட வேண்டாம் , சந்தோசப்படுங்கள் நீங்கள் ஆண்மைத்தன்மையானவர் என்று.
உடலுறவின் போது ஆணுறுப்பு சரியான முறையில் விறைக்க மறுக்கிறது எனும் ஆண்களே , சற்று அவதானித்துப் பாருங்கள், உங்களின் ஆணுருப்புக்களிலே அதிகாலை நேரத்தில் விறைப்பு ஏற்படுமானால் உங்களின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை , உளவியல் ரீதியான உங்கள் அச்சமே உடலுறவின் போது ஆணுறுப்பு விறைக்க மறுப்பதற்கான காரணமாகும்.

Tuesday, December 15, 2009
நீரழிவு நோயாளர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய இடுகை
நீரழிவு நோயானது நமது உடலால் குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்த முடியாமால் போவதால் ஏற்படுகிறது. நாம் சரியான நடைமுறைகள் மூலம் குளுக்கோஸின் அளவு அதிகம் ஆகாமல் வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் பாதிப்புக்களை முழுவதுமாக தடுத்து ஆயுசு முழுக்க சுகதேகியாக இருந்து விடலாம்.
வெறுமனே மாத்திரைகள் மூலம் மட்டும் நாம் குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்திவிட முடியாது , மாத்திரைகளை விட உணவுக் கட்டுப்பாடே முக்கியமானதாகும். எமது நாட்டுக்குப் பொருத்தமான ஒரு உணவு முறையை தருகின்றேன் .இந்த முறையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நீங்களும் சஊகமாக இருக்கலாம்.
காலை உணவு
பால் 1/2 கப் ( சீனி சேர்க்காது தேநீர் அல்லது கோப்பியுடன்)
தானிய வகை (50g) பின் வருபவற்றில் எதாவது ஒன்று
தோசை அல்லது இட்லி 2
இடியப்பம் 3
பிட்டு 2
பாண் 1/4
உப்பு மா 1
பின் காலை
காதலி வாழைப்பழம் ௧
மதிய உணவு
சோறு ஒன்றரைக் கப்
அசைவம் - மீன் 2 துண்டு அல்லது இறைச்சி 1/2 கப் அல்லது முட்டை 1
பருப்பு 1/2கப்
தயிர் 1/2 கப் என்பவற்றுடன் ,
மரக்கறி - விரும்பிய அளவில் உண்ணக்கூடியவை
கோவா ,சிறு கீரை, தக்காளி, வாழைப் பூ, காய்ப் பப்பாசி, பாகற்காய்,
வெண்டைக்காய் .
1/2 கப் மட்டும் உண்ணக் கூடிய மரக்கறி
அகத்தி,முருங்கக்காய் , முருங்கை இலை, கரட், வெங்காயம்.

தேநீர் வேளைபால் 1/2 கப்( சீனி சேர்க்காமல்)
2 சீனி சேர்க்காத பிஸ்கட்(கிறீம் கிறேக்கர்)
இரவு உணவு
தானிய வகை -- இடியப்பம், பிட்டு , பாண், உப்பு மா ( மதிய உணவில் கூறிய அளவுகளில்)
கறி வகை -- மதிய உணவைப் போல
படுக்கை நேரம் -- பால் 1/2 கப் சீனி சேர்க்காமல்
வாழைப் பழத்திற்கு பதிலாக உண்ணக் கூடிய பழ வகை
ஜம்பு 20 , விளம் பழம் 1
கொய்யா 1 ,புளித்தோடை 1
பப்பசிப்பழம் 1 துண்டு
விரும்பிய அளவில் உண்ணக் கூடியவை
தெளிந்த மரக்கறி சூப்,தக்காளி, எலுமிச்சை,மரக்கறி சலட்,தக்காளி, கோவா, சீனி சேர்க்காத தேநீர் அல்லது கோப்பி, அச்சாறு.
முற்று முழுதாக தவிர்க்க வேண்டியவை
சீனி ,சர்க்கரை, ஜாம், பணக்கட்டி, பழரசம்.
பி.கு- யாழ் வைத்திய சாலையில் வழங்கப் படும் துண்டுப் பிரசுரத்தில் இருப்பவற்றை அப்படியே உங்களுக்காகத் தந்திருக்கிறேன்.

மாதவிடாய் காலத்து வலிகள்
மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEA எனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.
அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில் 95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.
இந்த மாதவிடாய் கால வலியானது இரண்டாக பிரிக்கப்படலாம் .
பூப்படைந்த காலத்தில் இருந்தே ஏற்படுகிற வலி.
நான் மேலே சொன்ன விடயங்கள் இந்த வகையான வலியைப் பற்றியாகும். அதாவது பூப்படைந்த காலத்தில் இருந்தே உங்களுக்கு வலி ஏற்படுமானால் , இந்த வலியினால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது. நீங்கள் அதைப்பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
இருந்தாலும் இந்த வலியானது மாதவிடாய் ஆரம்பித்து முதல் 2 தொடக்கம் 3 நாட்களுக்கே இருக்கும். அதற்கு அதிகமாகவும் வலி இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது உகந்தது.
வலி இல்லாமல் இருந்து பிற்காலத்தில் ஏற்படுகிற வலி.
அதாவது ஆரம்பத்தில் வலியில்லாத மாதவிடாய்களைத் தொடர்ந்து இடையில் வலி ஆரம்பிக்குமானால் இந்த வலியானது வேறு சில நோய்களால் ஏற்பட்டதாக இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெறுவது உகந்தது.
*************************************************************************************
மாதவிடாய் காலத்து வலி கடுமையாக இருப்பவர்கள் சிறிய ரக வலிநிவாரணிகளை வாங்கி பாவிக்கலாம்.
உதாரணத்திற்கு பரசிட்டமோல் (PARACETAMOL) இரண்டு மாத்திரைகள் 8 மணிநேரத்திற்கு ஒருதடவை
அல்லது மேபினாமிக் அசிட்(MEFENAMIC ACID) எனப்படும் மாத்திரை இரண்டு 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை.
இந்த இடுகை பயனுள்ள இடுகை என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் வாக்களித்து மேலே சென்று வாக்களித்து மற்றவர்களுக்கும் போய்ச் சேரச் செய்யுங்கள் அப்படி இல்லாவிட்டால் பிழைச் சுட்டிக் காட்டுங்ககள் பயனுள்ள இடுகைகளை எழுதுவதற்கு வழிகாட்டியாக அது அமையும் .

Saturday, December 12, 2009
வைத்தியரின் கழுத்தில் இருக்கும் கருவி எப்படி பயன்படுகிறது.

(sthescope)ஸ்டெதஸ்கொப் எனப்படுவது வைத்தியர்கள் வைத்திருக்கும் ஒரு உபகரணம். உண்மையில் இந்த STHESCOPE எந்த வகையில் வைத்தியர்களுக்கு உதவுகிறது, அதாவது இதன் பயன்பாடுகள் என்ன என்பது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
பொதுவாக சொல்லுவதானால் இந்த STHESCOPE ஒரு ஒலி பெருக்கியே !
அதாவது குறிப்பிட்ட சத்தங்களை ஒலிபெருக்கி வைத்தியருக்கு கொடுப்பதே இதன் வேலை . இந்த சத்தங்களின் அடிப்படையில் நிறைய நோய்கள் இனங்காணப்படலாம் .
எந்த விதமான சத்தங்கள் இனங்காணப்படலாம்?
பொதுவாக இதயத்தில் இருந்து உருவாகும் சத்தங்கள், நுரை ஈரலில் இருந்து உருவாகும் சத்தங்கள் மற்றும் குடலில் இருந்து உருவாகும் சத்தங்கள் இந்த STHESCOPE மூலம் வைத்தியர்களால் உணரப்படலாம்.
அதாவது இதயம் சுருங்கி விரியும் போது ஏற்படுகிற ஒலிகள் , சுவாசிக்கும் போது நுரை ஈரலின் உள்ளே காற்று போய் வருகிற சத்தங்கள் மற்றும் குடலின் ஊடாக உணவு பயணிக்கிற சத்தங்கள் சாதாரணமாக எல்லோரிலும் கேட்கும் இதை அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்த STHESCOPE மூலம் கேட்கலாம்.
சில நோய்களில் இந்த சாதாரண சத்தங்களில் மாற்றம் ஏற்படலாம் அந்த மாற்றங்களை அனுபவம் வாய்ந்த ஒருவரினால் அறிந்து கொள்ள முடியும். அந்த மாற்றத்தின் அடிப்படையில் அந்த நோய் அறியப்படும்.
உதாரணத்திற்கு , இதயம் சுருங்கி விரியும் போது எல்லோரின் இதயத்தில் இருந்தும் லப் டப் என்ற ஒலிகள் உருவாகும். ஆனால் இதயத்தில் உள்ளே ஒரு ஓட்டை இருக்குமானால் அந்த ஓட்டையின் ஊடக பயணிக்கும் குருதி மேலதிகமாக வேறு விதமான ஒரு சத்தத்தை உருவாக்கும் இது அனுபவம் வாய்ந்த ஒருவரினால் இனங் காணப்படலாம்.
இதேபோல இதயத்தில் உள்ள ஒரு வால்வில் (VALVE) ஏதாவது ஒரு மாற்றம் அல்லது நோய் ஏற்பட்டால் அதன் ஊடாக பயணிக்கும் குருதியின் சத்தம் சாதாரண சத்தத்தை விட விட வேறு விதமாக கேட்கும் , இந்த சத்தங்கள் வைத்தியரினால் இன் காணப்படலாம்.
நுரை ஈரலின் ஊடாக சுவாசக் காற்று பயணிக்கும் போது சத்தம் எல்லோரிலும் உருவாகும் ஆனால் நியுமோனியா போன்ற நுரை ஈரலின் நோய்களின் போது இந்த சத்தம் சாதாரணமாக எல்லோரிலும் கேட்கும் சத்தத்தை விட வித்தியாசமாக கேட்கும் , இதை வைத்து வைத்தியர் அந்த நோயினை இனங் கண்டு கொள்ளலாம்.
நுரை ஈரலின் ஊடாக காற்று பயணிக்கும் போது ஏற்படுகின்ற சத்தங்களையே வைத்தியர் உங்கள் முதுகில் வைத்து கேட்பார். அதன் போது காற்றோட்டத்தை அதிகரிப்பதற்காக நீங்கள் ஆழமாக மூச்செடுக்க வேண்டியிருக்கும்.
இப்படி சத்த வேறுபாடுகளை வைத்து எத்தனையோ நோய்கள் இனங் காணப்படலாம். இங்கே நான் குறிப்பிட்டவை ஒரு சில உதாரணக்களே !
கீழே உள்ள வீடியோவில் மனிதனின் இதயம் துடிக்கும் போது எல்லோரிலும் கேட்கின்ற லப் டப் சத்தங்களை அறிந்து கொள்ளுங்கள் ( இவை நிஜமான சத்தங்கள்). லப் என்பது முதலாவதாக கேட்கின்ற சத்தம் அதுவே S(SOUND) ONE என்றும் டப் என்று இரண்டாவதாக கேட்கின்ற சத்தம் S TWO என்றும் விளக்கப்படுகிறது இந்த வீடியோவில்.
மற்றவர்களையும் இந்த இடுகை போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தால் மேலே சென்று வாக்களித்து செல்லுங்கள்.
உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்
எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.
ஒரு பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரமானது , எத்தனை நாட்களுக்கொருமுறை அவளின் மாதவிடாய் அடைகிறாள் என்பதாகும்.
அதாவது ஒரு தடவை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் அடுத்தமுறை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் இடையே உள்ள மொத்த நாடகளுமே அவளின் மாதவிடாய்க் காலமாகும்.
இன்னும் இலகுவாகச் சொல்வதானால் ஒரு பெண்ணின் இரண்டு மாதவிட்டய்களை எடுத்துக் கொண்டோமானால் அந்த இரண்டு மாதவிடாய்களும் தொடங்கிய முதல் நாட்களுக்கிடையே இருக்கும் காலம் அவளின் மாதவிடாய்க் காலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய இந்தக் காலப் பகுதியை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தக் காலப்பகுதி பெண்களுக்கு பெண்கள் வேறுபடலாம். பொதுவாக இந்தக் காலப்பகுதி 21 - 31நாட்களுக்கிடையே இருக்கும்.
இந்தக் காலப்பகுதியின் குறிப்பிட்ட நாட்களே ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு தயாரான நிலையில் இருப்பாள் , இதைத் தவிர்த்து மற்றைய நாட்களில் உடலுறவில் ஈடுபட்டாலும் அவளால் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.
இந்தக் கர்ப்பம் தரிக்கக் குறைவான காலமே safe period எனப்படுகிறது. இதை எப்படிக் கணிக்கிறது என்று பார்ப்போம்.
இதற்கு முதலில் அந்தப் பெண் தனக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்களின் தினங்களை சில மாதங்களுக்கு குறித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒவ்வொரு மாதவிடாய்க்களுக்கும் இடைப்பட்ட நாட்களை கணித்துக் கொள்ள வேண்டும். எல்லா மாதவிடாய்களுக்கும் இடையேயான காலம் நிச்சயமாக ஒரே அளவாக இருக்காது.
இந்த காலப்பகுதிகளின் ஆகவும் குறைந்த நாட்களைக் கொண்ட காலப் பகுதிகளில் உள்ள நாட்களில் இருந்து 18 நாட்களைக் கழித்து வைத்துக் கொள்ளுங்கள் .
உதாரணத்திற்கு அவளின் இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட குறைந்த இடைவெளி 26 நாட்கள் எனில் இந்த 26 யில் இருந்து 18 யை கழித்துக் கொள்ள வருவது 8.
அடுத்து அவளின் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட அதி கூடிய காலத்தில் இருந்து 10 நாட்களைக் கழித்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு அவளின் மாதவிடாய்களுக்கிடையே உள்ள அதி கூடிய காலம் 31 நாட்கள் என்றால் அதிலிருந்து 10 நாட்களைக் கழித்துக்கொள்ள வருவது 21.
இனி வரப்போகின்ற மாதவிடாய் தொடங்கும் நாளை முதல் நாளாகக் கொண்டால் அவளுக்கு அந்த முதல் நாளில் இருந்து 8 வது நாளுக்கும் 21வது நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கொண்ட நாடகளாகும். இது தவிர்ந்த மற்ற நாட்களில் எந்தப் பாதுகாப்பும் இன்றி உடலுறவு கொண்டாலும் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.
இந்த 8 தொடக்கம் 21 நாட்களுக்கிடைப்பட்ட காலம் fertile period எனப்படும்.
அதாவது கர்ப்பம் தரித்தளுக்கு தயாரான காலம். மீதமிருக்கும் காலம் safe period எனப்படும்.
குழந்தை உருவாக தாமதமாகும் தம்பதியினர் இந்தக் காலப்பகுதியில் அதிகம் உறவில் ஈடு படும் போது அவர்களுக்கு குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
குழந்தை வேண்டாம் அல்லது பிற்போட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியினர் இந்தக் காலப் பகுதியை தவிர்த்து மற்றைய காலப் பகுதிகளில் உறவில் ஈடுஇவ்வாறு உங்களுக்குரிய கர்ப்பம் கர்ப்பம் தரிக்கும் காலம் மற்றும் பாதுகாப்பான காலத்தை உங்கள் மாதவிடாய்க் காலப்பாதியை சரியான முறையில் குறித்து மேலே சொன்ன முறையில் கணித்துக் கொள்ளுங்கள் .
படலாம்.
பி .கு- இது மாதாமாதம் சரியாக மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இப்படியான இடுகைகள் தொடர்வது நல்லது என்று நினைத்தால் மேலே சென்று வாக்களித்துச் செல்லுங்கள்.

Thursday, December 10, 2009
பூப்படைதல் ஒரு நாள் நிகழ்வா ?
வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில்தான் சிந்திக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல11-12 வயதளவில்தான் ஆரம்பிக்கிறது.
ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது.
நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகுதான். பாருங்கள் 8வயதில் நிகழவேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில்.
இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்ல. இது பெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வாகும்.
பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?
பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்றும் உளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.
பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சியோடு.
இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும். அதைப்போல உடற் பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும். குறிப்பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவது போன்ற மயிர் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல் , மற்றும் அக்குள் பகுதிகளிலே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததாக மெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.
இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங்களின் பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்று கொண்டாடுகிறோம்.
மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.
அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் . இது ஒழுங்க்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அந்தப் பிள்ளைக்கு தெளிவு படுத்தப் படவேண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமையாகும்.
இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத்தொடங்கும். சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கலாம்.
மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல் மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.
அடுத்த பதிவு- ஆண்கள் பூப்படைவது எப்படி.

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?
ஒரு பெண் முதன் முதலில் இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.
நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.
முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.

முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.
சில பெண்களுக்கு இந்த கைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்
சில பெண்களுக்கு இந்த கைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.
சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த கைமண் உடைந்து விடலாம்.
சில பெண்களிலே இந்த கைமண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.
ஆகவே கைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.

Tuesday, December 8, 2009
குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்
(மீள் பதிவு )
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.
மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?
இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம்.
முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால் , முதலாம் மாதத்தோடு ஒன்பது மாதங்களைக் கூட்டுங்கள், பின்பு முதலாம் திகதியோடு ஏழைக்கூட்டுங்கள்.
உங்கள் கடைசி மாதவிடாய் திகதி - 01 / 01/ 2009
நீங்கள் கூட்ட வேண்டியது - 07/09/....
குழந்தை பிறக்கும் அனுமானித்த திகதி -08/10/2009
இந்த திகதியானது வெறுமனே ஒரு அனுமானித்த திகதிதான் , சரியாக இந்த திகதியில்தான் குழந்தை பிறக்கும் என்றில்லை சில நாட்கள் முந்தள்ளியோ பின் தள்ளியோ போகலாம். ஆனாலும் இந்த திகதியை அடிப்படையாக வைத்தே அந்த கர்ப்பிணிக்கான மருத்துவ முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
இப்படிக் கணிப்பது கூட கஷ்டம் என்பவர்கள் சும்மா ஜாலியா கீழே உள்ள லிங்கிலே போய் உங்களின் மாதவிடாய் திகதியை கொடுத்துவிடுங்கள் அங்கே உள்ள கணிப்பான் உங்கள் திகதியை கணித்துச் சொல்லி விடும்.
http://www.bestinfosite.com/edd.asp
பி.கு- தொடர்ச்சியாக கர்ப்பிணி மருத்துவம் என்ற லேபிலிலே கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தமான அடிப்படை கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆக்க பூர்வமான சந்தேகங்களையும் முன்வையுங்கள் பதிவிட்டு தீர்த்து வைக்கிறேன்.
மற்றவர்களுக்கும் இந்த பதிவைக் கொண்டு சேர்க்க மேலே சென்று வாக்களித்து விடுங்கள்...

வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்
குழந்தை பிறக்கும் போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காத போது குழந்தைப் பிறப்பை இலகுவாக்குவதற்காக தாயின் பிறப்பு உறுப்பின் ஓரம் வெட்டப்படும்.
இது எபிசியோட்டமி(Episiotomy) எனப்படும்.
இந்த செயமுறையானது அநேகமாக முதல் பிரசவத்தின் போது தேவைப்படும்.
உண்மையில் வெட்டப்படும் பகுதிக்கு விறைப்பு ஊசி போடப்பட்டே வெட்டப்பட வேண்டும் என்றாலும் எமது நாடுகளிலே எந்த விதமான ஊசிகளும் போடபபடாமலேயே வெட்டப்படுகின்றன. அவ்வாறு விறைப்பு ஊசி போடாமல் வெட்டினாலும் பிரசவ வேதனையில் இருக்கும் அந்த தாய்க்கு வெட்டப்படும் வேதனை மிகவும் குறைவாகவே உணரப்படும். ( அதாவது வெட்டப்படும் வலியை விட பிரசவ வேதனை அதிகம் என்பதால் மூளை பிரசவ வேதனையையே அதிகமாக உணரும்)
குழந்தையின் தலை பிறப்பு வழியினூடாக தெரியத் தொடங்கும் போதே பிறப்புறுப்பு வெட்டப்படும்.( பிரசவத்தின் இறுதிப் பகுதி)
குழந்தை பிறந்த பின் வெட்டிய பகுதி தைக்கப்படும்.
இதன் பின் விளைவுகளாக வெட்டிய இடத்தில் இரத்தப் போக்கு , கிருமித் தொற்று போன்றவை ஏற்படலாம் .
நேர்த்தியாக வெட்டப் பட்டு , தைக்கப் பட்ட பெண்களிலே இதனால் தழும்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
இனி இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்கும்( படத்தை கிளிக்குங்கள்)...
இந்த இடுகை மற்றவர்களையும் போய்ச் சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தமிழ் மணத்தில் வாக்களித்துச் செல்லுங்கள்...

Sunday, December 6, 2009
உயிர்காக்கும் இறுதி முயற்சி -வீடியோ - இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்
உயிர்காக்கும் இறுதி முயற்சியாக நாம் கொடுக்க வேண்டிய முதலுதவி பற்றி முந்திய இடுகையில் பதிந்திருந்தேன். இந்த இடுகையில் நிஜமாக நேரடியாக அந்த செய்முறை மூச்சும் இதத் துடிப்பும் நின்று போன ஒரு பெண்ணுக்கு கொடுக்கப் படுவதைப் பாருங்கள்....
வைத்திய சாலை என்பதால் இங்கே உதட்டோடு உதடு வைத்து சுவாசம் வழங்கப் படாமல் அம்பு பேக்(AMBU BAG) என்ற உபகரனத்தி ஊடாக வழங்கப் படுகிறது.

Saturday, December 5, 2009
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர்காக்கும் செய்முறை -நேரடி வீடியோவுடன்
அருகிலே இருப்பவரோ அல்லது நாமோ மயக்கமடைவது என்பது நாம் எப்போதாவது சந்திக்கின்ற ஒரு நிகழ்வு.
அநேகமான இந்த மயக்க நிகழ்வுகள் இடம் பெறுவது தற்காலிகமாக மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவதினால் ஆகும். உதாரணத்திற்கு ஒருவர் நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்கும் போது அல்லது இருக்கும் போது குருதி புவி
ஈர்ப்புக் காரணமாக கால்களிலே தேங்கும் போது மூளைக்குச் செல்லும் ஒட்சிசன் மற்றும் குளுக்கோஸின் அளவு குறைவதினால் தற்காலிக மயக்கம் ஏற்படலாம்.
இவ்வாறன சந்தர்ப்பத்தில் மயக்கமனவர் தரையில் நேராக கிடத்தப்படும் போது கால்களும் தலையும் ஒரே மட்டத்திலே வருவதனால் கால்களில் குருதித் தேக்கம் குறைந்து மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு அதிகரித்து அவர்கள் சுயநினைவை எந்தப் பிரச்சினையும் இன்றி பெற்றுக் கொள்வார்கள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது இவர்களின் மயக்கத்திகு காரணம் உடலின் வேறு பகுதியில் குருதி தேங்குவதால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவதே. மற்றுப் படி இவர்களின் இதயம் மற்றும் சுவாசத் தொழிற் பாடுகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
ஆனால் சில மயக்க நிலைகள் இதய மற்றும் சுவாச தொழிற் பாடுகளின் நிறுத்தத்தினால் ஏற்படும். இந்த சந்தர்ப்பம் cardio respiratory arrest எனப்படும்.
பல்வேறு பட்ட நோய்கள் / காரணங்கள் இவ்வாறு இதயம் மற்றும் சுவாச நிறுத்தத்திற்கு காரணமாக அமையலாம்.
இதற்கான காரணங்களை நான் பட்டியல் இட்டால் நிச்சயமாக மருத்துவ அறிவு இல்லாத ஒருவரினால் புரிந்து கொள்ள முடியாது.
ஆனாலும் இவ்வாறு இதய மற்றும் சுவாச தொழிற்பாடு நின்று போன ஒருவருக்கு உடனடியாக ( சில நிமிடங்களுக்குள்ளேயே ) மருத்துவ உதவி வழங்கப் படா விட்டால் அவரின் உயிர் நிரந்தரமாகவே பிரிந்துவிடும்.
அதாவது வீதியிலோ அல்லது வீட்டிலோ ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் அவர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப் படுவதற்கு முன்னமே நிரந்தரமாக உயிர் இழந்து விடுவார்.
ஆகவே இந்த நிலை ஏற்பட்ட ஒருவர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லும் முன்னமே அவருக்குரிய தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு நபரும் இதய மற்றும் சுவாசம் நின்ற ஒருவருக்கு எப்படியான முதலுதவி வழங்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும்.
இதயம் மற்றும் சுவாசம் நின்ற ஒருவருக்கு கொடுக்கப் படும் முதலுதவி CPR(cardio pulmonary resuscitation எனப்படும்.
வெறுமனே எழுத்துக்களால் மற்றும் இந்த செய்முறையை நீங்கள் படித்து அறிந்து கொள்ள முடியாது, நேரடியான செயன்முறை பயிற்சி மூலமே இதை நீங்கள் நேர்த்தியாகப் பழகலாம். இதற்காக நீங்கள் சில மணி நேரங்களை செலவழித்தாலே போதும்.
நீங்கள் சிலபேர் ஒரு குழுவாகச் சேர்ந்து உங்களுக்கு அண்மையில் இருக்கும் ஒரு வைத்தியரை நாடி அல்லது செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முதலுதவி நிலையங்களின் உதவியைப் பெற்றுக் கற்றுக் கொள்ளலாம்.
சில அடிப்படை விடயங்களை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.
முதலில் மயக்கமானவ்ரின் இதய சுவாச தொழிற்பாடுகள் நின்று விட்டதை உறுதிப் படுத்த வேண்டும். அவரின் நாடித்துடிப்பை(pulse)பிடித்துப் பார்ப்பதன் மூலம் இதய பாதிப்பு உள்ளதை அறியலாம்.
மற்றும் அவரின் நெஞ்சுப் பகுதி சுவாச அசைவுகளை காட்டுகிறதா ? மற்றும் மூக்கின் அருகே உங்கள் கையை வைத்து சுவாசக் காற்று வெளிவருகின்றதா என்று அறிவதன் மூலம் சுவாச பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு இதயம் சுவாச தொழிபாடு நின்று போன ஒருவருக்கு அடுத்ததாக நாம் உடனடியாக உயிர் காக்கும் செயன் முறையை (CPR) வழங்க வேண்டும்.
முதலாவதாக சம தரையில் கிடத்தி அவரின் காற்று வழி பாதையை சரி செய்ய வேண்டும். அவர் பொய்யான பற்கள் கட்டிய ஒருவரானால் அந்த பற்கள் அவரின் சுவாசப் பாதையை அடைக்கலாம் அவற்றை நீக்க வேண்டும்.
மற்றும் உணர்வற்ற ஒருவரின் நாக்கு பின் புறமாக சரிந்து காற்றுப் பாதையை அடைக்கலாம். இதைத் தவிர்ப்பதற்கு அவரின் நாடியைச் சற்றுத் தூக்கிப் பிடித்தல் உகந்தது.
இவ்வாறு அவரின் சுவாசப் பாதையை சரியாக்கிய படி அவருக்கு இதய அழுத்தங்கள் கொடுக்கப் பட வேண்டும். இதய அழுத்தம் எனப்படுவது(CARIDAC MASSAGE ) நின்று போன இதயத்தை உங்கள் கைகளால் அழுத்துவதன் மூலம் மீண்டும் இயங்கத் தூண்டுதல். உங்கள் இரண்டு கைகளையும் பயன் படுத்தி நெஞ்சுப் பகுதியிலே அழுத்தமாக அழுத்த வேண்டும். நிமிடத்திற்கு நூறு தடவை என்ற வீதத்தில் அழுத்த வேண்டும்.
அதே நேரம் இன்னுமொருவர் பாதிக்கப் பட்டவருக்கு செயற்கையான சுவாசத்தினை வழங்க வேண்டும். இதற்காக் அவர் தன் உதட்டை பாதிக்கப் பட்டவரின் உதட்டோடு வைத்து தன் மூச்சை பாதிக்கப் பட்டவரின் வாய்க்குள்ளே ஆழமாக விட வேண்டும்(MOUTH TO MOUTH BREATHING).
அண்ணளவாக முப்பது இதய அழுத்தத்திற்கு இரண்டு மூச்சு என்ற வீதத்திலே வழங்கப் பட வேண்டும்.இதன் போது பாதிக்கப்பட்டவரின் மூக்கினைப் பொத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதலுதவி வழங்கிய படியே நோயாளி வைத்திய சாலைக்கு எடுத்துச்
செல்லப் பட வேண்டும்.
இங்கே நான் குறிப்பிட்டவை சில அடிப்படை தகவல்களே . சரியான முறையில் இந்த முதலுதவியை நான் முன்பே சொன்ன படி தகுந்த ஒருவரிடம் இருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
கீழே உள்ள வீடியோ எப்படி இதய அழுத்தம் கொடுக்கப் பட வேண்டும் என்பதை விளக்குகிறது.
இந்தச் செயற் பாட்டினை விளக்கும் ஒரு வீடியோவைப் கீழே பாருங்கள்.
பி.கு-இந்த இடுகையை மற்ற நண்பர்களுக்கும் கொண்ட சேர்க்க உங்கள் வாக்கினை தமிழ் மணத்தில் அளித்துச் செல்லுங்கள்

Friday, December 4, 2009
நெஞ்சு வலியெல்லாம் மாரடைப்பா?
நெஞ்சுப் பகுதியில் நோ ஏற்பட்டாலே எல்லோரும் மாரடைப்பு ஏற்பட்டு விட்டதோ என்றுதான் அஞ்சுவார்கள். நெஞ்சில் ஏற்படுகிற நோ எல்லாமே இதயத்தில் ஏற்படுகிற நோ அல்ல. ஏற்பட்டிருக்கும் நோவின் சில தன்மைகளை வைத்து இது இதய வலியா அல்லது வேற ஏதாவது வலியா என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்.
இதய வலியின் சில இயல்புகள்....
எல்லாவற்றிற்கும் மேலாக வலியானது நடக்கும் போது அல்லது வேலை செய்யும் போது அதிகரித்தல்.
இப்படியான இயல்புகளைக் கொண்ட ஒரு வலி உங்கள் நெஞ்சில் ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.
ஆனாலும் இந்த மாதிரியான இயல்பு மாரடைப்பு ஏற்படும் எல்லோருக்கும் ஏற்படாது. குறிப்பாக நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு, வலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம்.
இதய வலியின் சில இயல்புகள்....
- வலியானது நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் ஏற்படும்
- இந்த வலியானது இறுக்கிப் பிடிக்கின்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும்
- வலியானது கழுத்து மற்றும் கை பகுதிகளுக்கு பரவிச்செல்லும்
- வலியோடு நெஞ்சு படபடப்பு , வியர்வை போன்றவை ஏற்படுதல்
எல்லாவற்றிற்கும் மேலாக வலியானது நடக்கும் போது அல்லது வேலை செய்யும் போது அதிகரித்தல்.
இப்படியான இயல்புகளைக் கொண்ட ஒரு வலி உங்கள் நெஞ்சில் ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.
ஆனாலும் இந்த மாதிரியான இயல்பு மாரடைப்பு ஏற்படும் எல்லோருக்கும் ஏற்படாது. குறிப்பாக நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு, வலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம்.
உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்
உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.
உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.
இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.
இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.
இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?
நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.
இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay
எனப்படுகிறது.
இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .
அவையாவன ,
பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.
மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.
உளவியல் சம்பந்தப் பட்ட பிரகுச்சனைகள் .
பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.
எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்.

ஒரு குழந்தை எப்படி முதிர்கிறது ? (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)
இது தொடர்பான இன்னுமொரு இடுகை
முந்திய இடுகையை வாசிக்க இதை அழுத்துங்கள்மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
- தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
- குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
- அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை
- ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
- நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
- நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
- இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
- தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
- சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
- விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
- தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை
- சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
- மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்
- நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
- தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
- கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
- சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
- சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
- துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
- மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
- இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
- தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
- அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
- வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
- மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
- வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
- பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்
ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள்
ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.
மற்ற மூன்று பிரிவுகளிலும் ஏற்படும் வளர்ச்சிப் படிமுறைகளை அடுத்த இடுகைகளில் இடுகிறேன்...

- அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
- சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
- நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
- பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.
- தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
- குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
- துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
- எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
- தவழுதல் -------- 8மாதம்
- எழுந்து நிற்றல் -------- 9மாதம்
- பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
- துணையின்றி நடத்தல் ---------12மாதம்
- ஓடுதல் -------- 15மாதம்
- ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
- மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36 மாதம்
மற்ற மூன்று பிரிவுகளிலும் ஏற்படும் வளர்ச்சிப் படிமுறைகளை அடுத்த இடுகைகளில் இடுகிறேன்...
Thursday, December 3, 2009
ஒரு குழந்தையின் பிறப்பு ( அனிமேசன் வீடியோ )
கருவில் இருக்கும் ஒரு குழந்தையின் பிறப்பு அனிமேசனாக காட்டப்படுகின்றது.
ரத்த இழப்புக்கள்
உட்புற ரத்த இழப்புக்கள் பற்றிய முந்திய இடுகையின் தொடர்ச்சி ....
முந்திய இடுகை .
விபத்துக்களின் போது வயிற்றிக்கு அடுத்த படியாக உட்புற ரத்த இழப்பு ஏற்படக்கூடிய இடம் நெஞ்சுப் பகுதியாகும். நெஞ்சினுள்ளே உள்ள நுரையீரல் குருதிக் குழாய் வெடிப்பதனால் நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே குருதி வெளியேறி தேங்குவது தெரியாமலேயே உயிரழப்பு ஏற்ப்படலாம். அதேபோல இதயம் கூட இவ்வாறு பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்.
நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே குருதி தேங்குவது கீமோ தொராக்ஸ் (haemo thorax) எனப்படும.
அடுத்ததாக தலையினுள்ளே மூளையைச் சுற்றி அல்லது மூளைக்குள்ளேயே குருதி இழப்புக்கள் ஏற்படலாம்.இவை intra cranial heamorrage எனப்படும்.
மேலும் கண்ணுக்குத் தெரியாத குருதி இழப்புக்கள் கைகால் பகுதிகளிலும் ஏற்படலாம். உதாரணத்திற்கு எலும்பு முறிவு ஏற்படும் போது முறிந்த எலும்பு குருதிக் குழாயை கிழிக்கும் போது குருதி தசைக்கும் தோலுக்கும் இடையே ஊடுருவும் இது கண்ணுக்குத் தெரியாத இழப்பு என்றாலும் இந்த குருதி சதையின் உள்ளே உள்ள குருதிக் குழாய்களை அமுக்கி அந்த இடத்திற்கு அப்பால் குருதியைச் செல்ல விடாமல் தடுப்பதன் மூலம் , பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு அப்பால் குருதி ஓட்டம் தடைப்பட்டு அந்த பகுதியையே அகற்ற வேண்டி ஏற்படலாம். இது compartment syndrom எனப்படும்.

Wednesday, December 2, 2009
இரத்த இழப்புக்கள்
இரத்தம் என்றாலே அநேகமானோர் ஒருகணம் கலங்கித்தான் போவார்கள். அதுவும் நமது இரத்தத்தை நாமே பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வு இன்னும் கொஞ்சம் பயங்கரமானது நிறையப் பேருக்கு.
நமது உடலில் இருந்து அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறுவதனாலேயே சில மரணங்கள் நிகழ்கின்றன .குறிப்பாக விபத்துக்களுக்கு உள்ளான ஒருவர், யுத்த வெடி குண்டுகளிலே சிக்கிய ஒருவர், அல்லது குழந்தை பிறப்புக்கு பின் அதிகம் ஏற்படும் ரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறப்பதற்கு முக்கிய காரணம் இந்த இரத்தப்போக்காகும்.
இவ்வாறு இரத்தம் போவது ஆங்கிலத்திலே கீமரேஜ்(haemorrahage) எனப்படுகிறது.இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக ஒரு காயத்தினால் வெளியிலே எமக்கு தெரியும் படி நடைபெறும் போது வெளிப்புற இரத்தப் போக்கு (external haemorrahage)எனப்படுகிறது. இதுவே எமது கண்களுக்குத் தெரியாமலும் நடைபெறலாம்.
உதாரணமாக வயிற்றிலே பலமாக அடிபட்ட ஒருவருக்கு வெளியில் காயம் இல்லாவிட்டாலும் உள்ளே இருக்கும் சில உறுப்புக்களில் சிதைவு அல்லது காயம் ஏற்பட்டு நமது கண்களுக்குப் புலப்படாமல் இரத்தப் போக்கு ஏற்படலாம்.
இது உட்புற இரத்தப்போக்கு(internal haemorrahage எனப்படுகிறது.
வயிற்றினுள்ளே இலகுவாக பாதிக்கப்பட்டு நமது கண்களுக்குத் தெரியாமலே இரத்தக் கசிவுகளை பொதுவாக ஏற்படுத்தும் உறுப்புக்கலாவன, ஈரல்(liver) , சதையிpancrease) , மண்ணீரல்(spleen),கீல்வாய்ப் பெருனாளம்(inferior vena cava) எனும் குருதிக் குழாய்.
இந்த உட்புற ரத்தப்போக்கினை உடனடியாக இனங்கண்டுகொள்ள , ஒரு வைத்தியரினாலேயே முடியும். ஆனாலும் எதோ ஒரு விதத்தால் வயிற்றிலே தாக்கப்பட்ட அல்லது தாக்கப் பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ள ஒருவர் சடுதியாக மாற்றங்களை காட்டுவாரானால், அதாவது, உணர்வு நிலை
குறைதல், கைவிரல்கள் நீல நிறமாதல் , கை கால் போன்றவை குளிர் நிலையை அடைதல் , வயிற்றிலே தொடர்ந்தும் நோ இருத்தல் போன்ற குனங்குறிகளைக் காட்டுவாரானால் அவர் யாருக்கும் தெரியாமல் இரத்தத்தை இழந்து கொண்டிருக்கலாம் என்பதை நீங்களும் ஊகித்து உடனடியாக வைத்தியரின் ஆலோசனை நாடுவது உகந்தது.
நான் மேலே சொன்ன படி வெளியில் அடையாளம் இல்லாமல் உட்புற பகுதிகளை மட்டும் பாதிக்கும் காயங்களை அல்லது தாக்குதல்களை ஆங்கிலத்திலே blunt trauma என்கின்றோம்.
மேலும் நான் சொன்னது வயிற்றிலே ஏற்படும் பாதிப்பை மட்டுமே , ஆனாலும் இந்த உட்புற இரத்தப்போக்கு நெஞ்சு, தலை போன்ற பகுதிகளையும் மட்டுமல்ல, கை கால் போன்ற உறுப்புக்களிலும் கூட ஏற்படலாம். இதுபற்றி தொடராக அடுத்துவரும் பதிவுகளிலே குறிப்பிடுகிறேன்....

Tuesday, December 1, 2009
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவல்
பரசிட்டமோல் பற்றிய அடிப்படை விடயங்கள் சார்பான இறுதிப் பதிவாக இந்தப் பதிவை இடுகின்றேன்.
முந்திய பகுதிகளை வாசிக்க...
இடுகை 1
இடுகை 2
இனி இந்த இடுகையில் சிறுவர்களுக்கு தேவையான பரசிட்டமோல் பாணி மருந்தின் அளவைக் கணிப்பது எப்படி என்று இடுகை இடுகின்றேன்.
முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)
இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?
5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.
இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.
அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)
இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).
இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.

எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம்-பரசிட்டமோல்2
பரசிட்டமோல் பற்றி அடிப்படைத்தகவல்களை இந்த இடுகையில் இட்டிருந்தேன்.
இந்த இடுகையில் ஒவ்வொருவருவருக்கும் தேவையான பரசிட்டமோலின் அளவை எப்படி கணிப்பது என்று பதிவிடுகிறேன்.
நான் சொல்லியது போல மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.
எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?
ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mg
அதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.
பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )
உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அண்ணளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.
நான் மேலே சொன்னது ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.
நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.
உங்கள் குழந்தைகளுக்குத் தேவையான பரசிட்டமோல் பாணி மருந்தின் அளவை கணிப்பது எப்படி என்று அடுத்த பதிவில் இடுகிறேன்.

Subscribe to:
Posts (Atom)